உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியாறு அணை தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா : பன்னீர்செல்வம் பேச்சு

பெரியாறு அணை தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா : பன்னீர்செல்வம் பேச்சு

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி தேக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.பென்னிகுவிக்கின் 184வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் ஓ.பன்னீர்செல்வம் கூறியது:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பென்னிகுவிக்கிற்காக லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டி அதை நேரில் வந்து திறந்து வைத்தவரும் அவர்தான்.பேபி அணையை பலப்படுத்திய பின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. நீர்மட்டத்தை உயர்த்துவதை தடுக்கும் வகையில் கேரள சட்டசபையிலும் புதிதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகப் பகுதியில் போடப்பட்ட வழக்கை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.L.Narasimman
ஜன 16, 2025 12:52

பன்னீரூ பற்றிய செய்திகளை தினமலரு மட்டும் ரொம்ப விசுவாசமாக வெளியிட்டு அவர் இருப்பை காட்டி கொள்ளும்.


சமீபத்திய செய்தி