உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுன்சிலர்கள் பதவி நீக்கத்தை எதிர்த்த வழக்கு; அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

கவுன்சிலர்கள் பதவி நீக்கத்தை எதிர்த்த வழக்கு; அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவை எதிர்த்த வழக்கில், வரும் 24ம் தேதிக்குள், அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை நீண்ட நாள் தள்ளி வைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சி, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம்,189வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயபிரதீப் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.மேலும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும், தி.மு.க.,வை சேர்ந்தவருமான, 11வது வார்டு கவுன்சிலர் சகுந்தலாவும் பதவி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், கடந்த மார்ச் 27ல் பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைவரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள், நேற்று நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தன.அப்போது, மனுதாரர்ஜெயபிரதீப் தரப்பில் டில்லி வழக்கறிஞர் எஸ்.ராகசந்தேஷ் ஆஜராகி வாதிட்டதாவது:மனுதாரர் தரப்பில் அளித்த பதில் பரிசீலிக்கப்படவில்லை. சுயேச்சையாக தேர்வான அவருக்கு அப்பகுதியில் நல்ல பெயர் உண்டு. தொகுதியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப துவங்கியதால், அவர் அரசு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுகிறார். நீக்கியதுசட்டவிரோதம் என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.அரசு தரப்பில், வழக்கு விசாரணையை, கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.மற்ற கவுன்சிலர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.டி.மோகன், வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.விசாரணையை நீண்ட நாள் தள்ளிவைக்கக்கூடாது; வரும் 24ம் தேதி தள்ளி வைக்க கோரினர்.இதையடுத்து, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையோ அல்லது நோட்டீசோ பிறப்பிக்கப்படாது என தெரிவித்த நீதிபதி, வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் மனுக்களுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Yasararafath
ஏப் 22, 2025 18:18

நீதிபதி செய்தது சரி


GMM
ஏப் 22, 2025 08:20

வார்டு கவுன்சிலர் என்று சான்றளிக்கும் அதிகாரி மட்டும் தான் குற்றச்சாட்டு உறுதியின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய முடியும். மாநில நிர்வாகம், துறை அதிகாரி, நீதிபதி பரிந்துரை செய்ய முடியும். நீக்க முடியாது. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சட்ட ,விதி எண் அடிப்படையில் அதிகாரி தனக்கு வழங்க பட்ட அதிகாரம் குறிப்பிட்டால் பல வழக்கு வராது . வழக்கிலும் சட்ட விவரம் இருக்காது. பணம் படுத்தும் பாடு .


VENKATASUBRAMANIAN
ஏப் 22, 2025 07:38

நீதிமன்றங்களுக்கு மட்டும் கோடை விடுமுறை வேண்டும். வழக்குகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் முடியாது. ஆனால் மற்றவர்கள் குறித்த காலத்தில் செய்ய வேண்டும். இல்லையெனில் காலக்கெடு நிர்ணயிப்பார்கள். இதுதான் நீதி


Dharmavaan
ஏப் 22, 2025 07:35

நீதிபதிகள் என்ன தேவர்களா ஏன் தனி சலுகை அவர்களும் இந்தியர்களே ஏன் இவ்வளவு விடுமுறை. மோடி துணிய வேண்டும் பொது மக்கள் கருத்து கேட்கப்பட்டு அதை செய்ய வேண்டும்


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 05:38

கோர்ட்டுகளில் AC இருக்கும்போது கோடை விடுமுறையை தியாகம் செய்யலாமே ..வீடுகளிலும் AC கார்களிலும் AC இருக்கே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை