மேலும் செய்திகள்
வர்த்தக வாகன விற்பனை 6.53 சதவீதம் உயர்வு
06-Sep-2025
சென்னை,நாட்டின் வீடு விற்பனை சந்தை, மெட்ரோ நகரங்களில் தொடர்ந்து அதிக வளர்ச்சி அடைந்து வருவதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டுடன் ஒப்பிடும்போது, வீடு விற்பனையில் டில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலமான என்.சி.ஆர்., 24 சதவீத உயர்வு கண்டுள்ளது. 10 சதவீதத்துடன் பெங்களூரு, 8 சதவீதத்துடன் ஹைதராபாத் முறையே இரண்டாவது, மூன்றாவது இடம்பிடித்துள்ளன. தேசிய அளவில் வளர்ச்சி சராசரி 9 சதவீதம் என்ற நிலையில், டில்லி, பெங்களூருவில் தேசிய சராசரியை தாண்டி வீடு விற்பனை நடந்து உள்ளது. வீடு விலை அடிப்படையில் ஒரு சதுரடி யின் தேசிய சராசரி விலை 9,105 ரூபாயாக உள்ளது.
வீட்டுக்கடன் இ.எம்.ஐ., அதிகரித்த நிலையிலும், குடும்பங்களின் வருமானம் உயர்ந்துள்ளதால், வீடு வாங்குவோர் அதிகரிக்கின்றனர். கொரோனா காலத்துக்குப் பின் மூன்று படுக்கையறை அல்லது விசாலமான இரண்டு படுக்கையறை வீடுகளையும், கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் பாதுகாப்பான, கூடுதல் வசதிகள் கொண்ட குடியிருப்புகளையும் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
06-Sep-2025