உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு: காடேஸ்வர சுப்பிரமணியம்

ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு: காடேஸ்வர சுப்பிரமணியம்

மதுரை: ''மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதுாறாக பேசி வருகின்றனர். ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மாநாடு நடத்தப்படுகிறது,'' என, மதுரையில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.மதுரையில் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி ஏற்பாட்டில் முருகபக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்காக அறுபடை வீடுகளில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட வேலுக்கு வண்டியூர் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் பூஜையும், யாகமும் நடந்தது. மாநாடு வரை தினமும் இந்நிகழ்வு நடக்கும்.நேற்று மாநாடு நடக்கும் இடத்தை மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பார்வையிட்டு கூறியதாவது: மாநாடு குறித்து அவதுாறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர். ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே நடத்தப்படுகிறது. கிறிஸ்துவர்கள் சென்னிமலை தங்களுடையது எனக்கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இம்மாநாடு நடக்கிறது. இது திருப்பு முனையாக அமையும். முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்தால் அவரை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுப்போம்.

ரஜினி வருகிறார்

அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் நிச்சயம் வருகிறேன் எனக்கூறியுள்ளார்.அமைச்சர் சேகர்பாபு 'முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உண்மையான பக்தர்கள் வர மாட்டார்கள்' என ஏன் அவர் கவலைப்பட வேண்டும்.'ஜூலை 7 திருச்செந்துார் குடமுழுக்கு விழா மாநாட்டிற்குதான் மக்கள் வருவார்கள்' எனக்கூறுகிறார். கடவுள் இல்லை என்று கூறியவர்கள் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர்.தாராளமாக நடத்தட்டும். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 2026ல் சட்டசபை தேர்தல் வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டு பறிபோய்விடுமோ என்று எண்ணத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர்.மதுரையில் மாநாட்டை தடுக்க எங்கள் மீது போலீசார் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 11, 2025 11:43

ஸ்கூல் TC லிருந்து ஆதி காலத்திலிருந்து இன்று வரை இருந்த இந்து என்கிற சொல்லை எடுத்துவிட்டான் கிருஸ்துவன். இது மலையில் உள்ள முருகன் கோவிலை தவிர மற்ற இடத்தை பிரித்து கொடு என்பது போல் உள்ளது. இது இந்துக்களுக்கு புரியவே பல காலம் ஆகும் பல இந்துக்கள் சரி என சொல்லுவார்கள்


seshadri
ஜூன் 11, 2025 11:33

வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்லை. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டாலின், உதவா நிதி போன்ற எல்லா கூட்டங்களும் நமது காலடியில் இருப்பார்கள். அது இல்லாததினால் தானே அவர்கள் எல்லாம் டுகிறார்கள். தி மு க வில் இருக்கும் இந்துக்களுக்கே அந்த உணர்வு இல்லாத பொது மற்றவர்களுக்கு எப்படி வரும்.


Nallavan
ஜூன் 11, 2025 11:05

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ள படி. ஔவையார்


AMMAN EARTH MOVERS
ஜூன் 11, 2025 09:06

இந்துக்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் உங்களை போல அமைப்புகள்தான் பிரிவினையும் பதற்றத்தையும் உருவாக்கின்றிர்கள்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 08:25

ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மாநாடு நடத்தப்படுகிறது.. இதைத்தான் கழகத்தினரால் தாங்க முடியவில்லை ..இந்துக்கள் ஒற்றுமை அடைந்துவிட்டால் ..திராவிட வியாபாரம் ..கம்னியூஸ்ட் வியாபாரம் போல் போண்டியாகிவிடும் .. மக்கள் விழிப்படைந்து விடுவார்கள் ..அப்புறம் இலவசம், உரிமைத்தொகை, இந்தி ஒழிக, நீட் தேர்வு ரத்து, பெரியார் மண்.. போன்றவை செல்லாக்காசாகிவிடும் ...


J.Isaac
ஜூன் 11, 2025 17:56

ரொம்ப நல்லது. அப்படியே ஒற்றுமையாக அனைவரும் டாஸ்மாக் செல்லுவதை நிறுத்தினால் அதை மூடிவிடலாம். கோடி குடும்பங்கள் வாழும். அப்படியே மாந்திரீகம், செய்வினை,ஏவல், குடும்பத்தை கெடுக்க தகடு மந்திரித்து வைத்தல் மந்திர கயிறு, பில்லிசூனியம், குறிசொல்லுதல் போன்றவைகளை விட்டுவிட்டால் ரொம்ப நல்லது.


Palanisamy T
ஜூன் 11, 2025 08:17

ஹிந்துக்களை எந்த காலத்திலும் ஒற்றுமைப் படுத்தமுடியாது. அவனவனுக் கென்று ஒருப் பாதை, ஒருக் கொள்கை. அதனால்தான் இத்தனை பிரிவுகள் சாதிச் சங்கங்கள், இயக்கங்கள். இதில் உயர்வு தாழ்வு என்ற சாதிமனப்பான்மை, மேலும் தீண்டாமை. தமிழகத்தில் இன்னும் ஹிந்துக்கள் ஏதோ மனதளவில் அடிமைப் பட்டுக் கிடக்கின்றார்கள். அதனால்தான் மத மாற்றுக்காரனுக்கு இங்கு நல்ல வியாபாரம் வருமானம். தமிழகத்தில் சரியாக தமிழ் படிக்காதவன் எந்தக் காலத்திலும் தன்னையொரு நல்ல தமிழனாக, இந்துவாக அடையாளம் காட்டிக் கொள்ளமுடியாது. இங்கே தமிழ் என்பது வெறும் ஏட்டளவில் எழுதி படிக்க கூடிய தமிழில்லை. தொன்மையான தமிழ் நூட்களை படித்தால்தான் நாம் யார் நம் உயர்வு தொன்மை என்னவென்று நமக்கு கொஞ்சம் தெரியவரும். சாதி சங்கங்கள் மற்றும் தீண்டாமை இவைகள் மட்டும் தமிழகத்தில் இன்றோ நாளையோ மறைந்து இல்லாமல் போய்விட்டால் நாம் அனைவரும் நல்ல தெளிவுப் பெற்ற தமிழர்களாக வாழ்வோம். முதலில் சாதி சங்கங்கள் இயக்கங்கள் தீண்டாமை மறைந்துப் போகக் கூடிய வழிகளை தேடுவோம்


முருகன்
ஜூன் 11, 2025 05:52

அப்போ தமிழ் கடவுள் முருகனுக்கு இல்லையா தமிழ் கடவுள் முருகன் பெயரில் உங்கள் பலத்தை கட்ட ஒரு மாநாடு என சொன்னதற்கு நன்றி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 08:27

நண்பரே காளிதாசன் எழுதிய குமார சம்பவம் முருக கடவுளை பற்றியதுதான் ... வடநாட்டில் பலரது பெயர்கள் குமார் என்று முடிவது குமர கடவுளின் நியாபகமாகத்தான் .. முருகன் இந்துக்களுக்கு பொதுவானவர் ..


Palanisamy T
ஜூன் 11, 2025 08:33

அவன் தமிழ் கடவுள் முருகன் மட்டுமில்லை. எல்லா உயிர்களுக்கும் அவன்தான் கடவுள். அவன் மட்டும்தான் உண்மை. உயிர்களை உய்விக்கும் பொருட்டு இவ்வுலகை தோற்றுவித்தவன். திருப்புகழ் அருணகிரியார் பாடிய "அருவமும் உருவமுமாகி அனாதியாய் பிழம்பாய்" என்றப் பாடலை ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பாருங்கள், விளங்க வில்லையென்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் . நாம் சும்மா அரை குறையாக படித்த நாம் கண்டபடியாக உளறக் கூடாது


vivek
ஜூன் 11, 2025 09:15

இந்த கொத்தடிமை முருகனுக்கு. கடவுள் முருகனை பற்றி தெரியாது.. இருநூறு, டாஸ்மாக் ரெண்டு மட்டுமே தெரியும்


Gajageswari
ஜூன் 11, 2025 05:49

கட்ட பஞ்சாயத்து செய்ய


Kasimani Baskaran
ஜூன் 11, 2025 03:53

அரநிலயத்துறை அறமற்றக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. வேற்று மதத்தினர் செய்யும் நாட்டாண்மைதான் அங்கு மேலோங்கி நிற்கிறது.


J.Isaac
ஜூன் 11, 2025 18:46

இந்து மதம் அல்ல என நாகேந்திரன் கூறியுள்ளாரே


முக்கிய வீடியோ