உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழிசையுடன் கமல் கட்சி டிஷ்யூம்; பட்டம் துறந்த விவகாரத்தில் மாறி மாறி விமர்சனம்!

தமிழிசையுடன் கமல் கட்சி டிஷ்யூம்; பட்டம் துறந்த விவகாரத்தில் மாறி மாறி விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., மிரட்டலால் தான் கமல் பட்டத்தை துறந்தார் என்று கூறிய பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதில் அளித்துள்ளது.சமீபத்தில், 'உலக நாயகன்' பட்டத்தை துறந்தார் நடிகர் கமல். 'இனி தன்னை கமல் அல்லது கமல்ஹாசன் என்றே அழைக்க வேண்டும்' என அறிவித்தார். 'ஆளும் தி.மு.க.,வின் மிரட்டலால் தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, இன்று (நவ.,14) மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை கமல் தனக்கு அளிக்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும் படி வெளியிட்ட அறிக்கையை அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.தேர்தலில் நின்று எம்.பி., ஆகி மத்திய அமைச்சராகி விடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை; தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்; கமல் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். கமல், உலக நாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Matt P
நவ 15, 2024 18:59

ஆமா இவரை இனிமேல் KH என்று கூப்பிடுங்க. தமிழில் க.ஹா என்று அழைக்கலாமே.


Barakat Ali
நவ 14, 2024 20:10

அண்ணாமலை பாஜகவுக்கு பாடுபட்டுத் தேடிவைத்த வாக்குகளை சிதறடித்துவிடுவார் இந்த சொருணாக்கா ....


Ganesun Iyer
நவ 14, 2024 18:09

எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும்... டார்ச் லைட்டை எதுக்கு உடைச்சாரு.. அதாவது 1.விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு: இனிமே, எனக்காக நீங்க கஷ்டப்படாதிங்க, உபிஸ்ஸுங்க பாத்துப்பாங்க.... ௨. அறிவாலயத்துக்கு: டார்ச்சை உடைச்சிட்டேன். நீங்களே பாத்து பதவி போட்டு குடுங்க...


MADHAVAN
நவ 14, 2024 17:48

தமிழிசைக்கு தேவை இல்லாத வேலை, நடிகர் கமல் தனது உடலைக்கூட மருத்துவத்துறைக்கு எழுதி கொடுத்த கலைஞன், மேலும் தான் சம்பாரித்த பணம் அனைத்தையும் திருப்பி திருப்பி தமிழ் சினிமாவில் இறைத்த மாபெரும் கலைஞன், உன்னை மாதிரி முன்னாள் முதல்வர் கலைஞரின் சிபாரிசில் படித்தவரில்லை, உனக்கு விளம்பரம் தேவையெனில் வடக்கே செண்டு வியாபாரம் செய்யவும், தாமரை மல்லாந்தே தீரும், தாமரை மல்லாந்தே தீரும்னு,


Selvarajan Gopalakrishnan
நவ 14, 2024 18:32

வாங்க மாதவன் . ஜாதி பாசம் அதிகம் உமக்கு


Jay
நவ 14, 2024 16:47

இரண்டுமே உண்மையாக இருக்கலாமே. திமுக நெறுக்குதலினாலும் ராஜ்யசபா எம்பி ஆகுவதற்கு தயாராகவதற்கும் தான் உலக நாயகன் அடை மொழியை கமலஹாசன் வாபஸ் வாங்கியிருக்க வேண்டும். கவர்னர் பதவியை விட்டு வந்தது தமிழிசை செய்த தவறாகவும் இருக்கலாம் பதவி ஆசையாகவும் இருக்கலாம்.


Rajarajan
நவ 14, 2024 16:11

ஏலே, உங்க அறிக்கையை தூக்கி குப்பைல போட. அந்தம்மா படிச்சி வாங்கின டாக்டர் பட்டம் எங்க, நீங்களே வெச்சிகிட்ட உருப்படாத உங்க பட்டம் எங்க. உங்க பட்டத்தை காத்தாடி தான் விடணும்லே. இல்லனா பொரி கடையில பட்டாணி தான் மடிக்கணும்.


Ganesh
நவ 14, 2024 15:03

எல்லாரையும் மக்களுக்கு உள்ள கஷ்டங்களை தீர்க்கிறதுக்கு உருப்படியா பேசுங்கன்னா... நாக்கை வழிக்க கூட உபயோகம் இல்லாத விஷயத்தை பேசுறாய்ங்க...


N.Purushothaman
நவ 14, 2024 15:01

திருட்டு திராவிடனுடன் சேர்ந்து வெக்கம் மானம் எல்லாத்தையும் துறந்தவன் இந்த பட்டத்தை துறந்தது ஏதோ உலக மகா சாதனை போல பீற்றி கொள்வது தேவையா ?


S. Venugopal
நவ 14, 2024 14:29

விஜயின் ராஜதந்திர அழைப்பினை காப்பியடித்து மற்றவர்கள் செய்யும் செயல்கள் நல்ல காமெடியாக இருக்கிறது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 14, 2024 14:12

அடுத்த உலக நாயகன் தயாராகிக் கொண்டுள்ளார். அதற்கு வழி விட்டு சீனியர் உலக நாயகன் பட்டம் துறந்தார். இளைஞர்களுக்கு முத்தம் கொடுக்க பயிற்சி அளித்தும் பள்ளியறை காட்சிகள் மூலம் இளைஞர்கள் இளைஞிகளின் மனதை கெடுத்த சினிமா கலை ஞானி பட்டத்தை துறந்தார். தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டால் இது தான் நிலமை. புகழ் மதிப்பு நற்பெயர் இவைகள் நம்மை தேடி வர வேண்டும் அவைகளை தேடி நாம் போகக்கூடாது. ரஜனிகாந்த் என்று ஒரு வரேன் வரேன் சொல்லிட்டு இன்னும் வெட்டு கொலை குத்துன்னு சினிமாவில் வயதான காலத்தில் இளைஞர்களுக்கு நல்லது சொல்லிக் கொடுக்காமல் அலைந்து கொண்டு பணம் பணம் என்று ஓடிக்கொண்டு உள்ளாரே ஒருவர் அவரை எதிர்க்க தானே இந்த உலக நாயகன் பட்டம் தானே சூட்டி பெருமை பட்டு கொண்டது. என்னய்யா எங்களுக்கு தெரியாதா


புதிய வீடியோ