உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்

நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வண்டலுார்: சென்னை அடுத்த வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் இயங்கி வரும் வி.ஐ.டி., பல்கலை, துவங்கப்பட்டு 15 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில், அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்; துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்; இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார்.தொழிலில் தோல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி., பேசியதாவது:நாடு சுதந்திரம் பெற்ற பின், அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா? நாட்டில், ஜாதி, மத வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம்.நானும், என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவர்கள், உலகின் பல நாடுகளில் பணியாற்றி, இந்தியாவுக்கும், இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள், தோல்விகளை இறக்கி வைத்து, வெற்றியை சுமந்தவர்களாக உள்ளனர். திமிரோ, வீரமோ, வணக்கத்திற்கு உரியது அல்ல; நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே, அஹிம்சை.நாத்திகம் என்ற வார்த்தையை, ஆத்திகம் தான் தந்தது. நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன். பகுத்தறிவு என்பது, அறிவு சார்ந்தது. இவ்வாறு பேசிய கமல், பின், மாணவர் களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னதாக, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:கடந்த 2010ம் ஆண்டு, 608 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்த பல்கலையில் தற்போது, 23,000 மாணவர்கள் பயில்கின்றனர். கூடுதல் நிதி இந்தியாவில், மக்கள் தொகைக்கு ஏற்ப உயர் கல்வி படிப்போர் விகிதம் இல்லை. மத்திய அரசு தன் மொத்த பட்ஜெட்டில், 2 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்குகிறது.இந்திய அளவில், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னேறி உள்ளது. நடப்பாண்டில், தமிழக அரசின் மொத்த வருவாயில், 21 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. ராஜ்யசபாவில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன், இது குறித்தும், உயர் கல்விக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவும், பார்லிமென்டில் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 245 )

Kalaiselvan Periasamy
செப் 15, 2025 22:45

பகுத்தறிவு என்று ஒன்று கிடையாது . இந்த வார்த்தையை வைத்தே வந்தேறி திராவிடர்கள் தமிழ்நாட்டை தன வசப் படுத்தி உண்மையான தமிழர்களை இந படுகொலை செய்து விட்டனர் என்பதை அறியாத நீ மிழனாக இருந்து ஒரு புண்ணியமும் இல்லை


M Ramachandran
செப் 13, 2025 23:46

அப்படியென்றால் ஒரு நரிக்குறத்தியையோ ஒரு துப்புரவு தொழிலாளி மகளை யோதிருமணம் செய்து வம்ச விருத்தி செய்திருக்க வேண்டும். அதற்கப்புறம் இப்படி பேசியிருந்தால் மக்கள் நம்பு வார்கள். திரையுலகில்பல சில்மிஷங்கள் . இணைத்து கொண்ட கௌதமின் மகளிடம் சில்மிசம். இது ஒரு பிஞ்சியிலேயேயே முத்தின கேஆசு சாக்கடை.


Ravi
செப் 08, 2025 10:17

இவர் பகுத்தறிவாளர் இல்லை


M Ramachandran
செப் 07, 2025 14:55

நல்ல வேலை நீங்க இழுத்த இழுப்புக்கு ரஜினி வரலை.


M Ramachandran
செப் 03, 2025 20:53

சினிமா தொழில் செய்துக்கிட்டிருந்தீங்க. அப்புறம் அரசியலுக்கு வந்து பெரிய நாற்காலியில் உட்காரனும்னு அரசியலுக்கு வந்தீங்க. ஒன்னும் நடக்கலே. அம்போன்னு கட்சியை தாரா வார்திட்டு விட்டுட்டீங்களே. அவரை திட்டிக்கிட்டிருந்தையோ அவர் காலில்விழுந்து ஒரு பதவிக்கு வணங்கி கூனி குறுகி முதுகை வளைத்து விட்டு கும்புடு போட்டு தரையில் உட்கார்ந்துட்டீங்களே...


Jagan (Proud Sangi )
ஆக 27, 2025 18:44

ரெஸ்ட் ரூம் பேப்பரை என்ன பெயர் சொன்னாலும் அதன் பொருள் மாறாதது போலத்தான்.


மாபாதகன்
செப் 10, 2025 17:05

அதாவது துடைக்கவாவது உதவும் இந்த சங்கிகள் எதுக்கும் உதவாது ?? மேய்க்கிறது கூட இல்ல எருமை ?? இதிலென்ன பெருமை.


M Ramachandran
ஆக 27, 2025 15:14

அது தெரியும்.


SIVAN
ஆக 27, 2025 11:56

அட நீ யாரா இருந்தா என்ன, நாட்டுக்கும் மக்களுக்கும் நீ ஒரு வேஸ்ட். 2026 ஜூன் முதல் வேற ஏதாவது வேலை பாத்துக்க.


Mohdgilani
ஆக 23, 2025 21:39

நீங்க பிறந்த இனத்துக்கே மண்ணுக்கே நாட்டுக்கே ஏன் உலகத்துக்கே இழுக்கு ....ஓடி போயிடுங்க


Ramaswamy Jayaraman
ஆக 22, 2025 15:12

வயதாகிவிட்டது. இனிமேல் சினிமா எடுபடாது. எங்காவது செட்டில் ஆக வேண்டும் திமுகாவில் செட்டில் ஆகிவிட்டார், என்ன பேசறோம் என்பது அவருக்கும் தெரியாது, மக்களுக்கும் புரியாது. உண்மையான பகுத்தறிவாளன் இந்த கட்சியில் சேர மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை