உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பங்களாவுடனும் போகலாம்; பங்களா இல்லாமல் கூட போகலாம்: எப்படி பேச வேண்டும் என கமல் பாடம்

பங்களாவுடனும் போகலாம்; பங்களா இல்லாமல் கூட போகலாம்: எப்படி பேச வேண்டும் என கமல் பாடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''என்னுடன் வந்தவர்கள் பங்களாவுடன் வந்தவர்கள் தான். ஆனால், பங்களாவுடனும் போகலாம்; பங்களா இல்லாமல் கூட போகலாம்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, கோவை, மதுரை மண்டல ம.நீ.ம., கட்சி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, கமல் பேசியதாவது: நாம் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். நம்மால் பூத் கமிட்டி கூட போட முடியாதா? பூத் கமிட்டியில், 10 நபர்கள் இருக்க வேண்டும். அதில், 2 வழக்கறிஞர், ஒரு மாணவர் இருக்க வேண்டும். அப்பட்டியலை தலைமை நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு திறமை இருக்கிறது என்பதை, நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.திறமை இல்லாதவர்களுக்கு நீங்கள் செய்வது பிடிக்கவில்லை; போகட்டும், எங்கிருந்தாலும் வாழ்க. கட்சியின் சார்பில், ஒரு மரம் வைக்க வேண்டும். மரத்தின் கொடி சாய்ந்தால் யாரும் வருத்தப்படுவதில்லை; மரம் விழுந்தால், அனைவரும் வருத்தப்படுவர். புது பாதையை நோக்கி நாம் பயணிப்போம். 'நம்மவர்' மையம் துவக்கி, நல்ல விஷயங்களை பேசுங்கள்; கெட்ட விஷயங்களை பேசக்கூடாது. எப்படி பேச வேண்டும் என, முறையாக பழகி பேச வேண்டும். அறிஞர்களும், துணிச்சல் மிக்கவர்களும் நமக்கு வேண்டும். நம்மிடம் இருக்கும் மூடர்களை திருத்த வேண்டும்; முரடர்களை தவிர்க்க வேண்டும்.என்னுடன் வந்தவர்கள் பங்களாவுடன் வந்தவர்கள் தான். ஆனால், பங்களாவுடனும் போகலாம்; பங்களா இல்லாமல் கூட போகலாம். தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்கு என ஒரு நடத்தை உள்ளது. இது ஒருவிதமான கூட்டுக் குடும்பம். நமக்கு தரும் பணிகளை செயல்வீரர்களாக செய்து முடித்தால் தான், நாம் பலம் அடைவோம்.என்னால் செய்ய முடியாததை, உங்களை செய்ய சொல்ல மாட்டேன். அரசியலில் சூழ்ச்சி தெரிய வேண்டும். பார்லிமென்டில் நான் அமர்ந்திருந்து பார்த்தேன். அங்கு, 70 தலைவர்கள், வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். எல்லாரும் ஒரே கட்சியில் இருந்தால், நாடு நிறைய வளர்ச்சியை எட்டும். இவ்வாறு கமல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை