உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்; வேட்பாளர்கள் அறிவித்தது தி.மு.க.!

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்; வேட்பாளர்கள் அறிவித்தது தி.மு.க.!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் தி.மு.க., சார்பில் வில்சன், சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் ம.நீ.ம.,வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கமல் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், ஜூலை 24ல் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bjfgp9e1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டு ஜூன் 19ம் நடக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க., வேட்பாளர்கள்!

* பி.வில்சன்* சிவலிங்கம்* ரொக்கையா மாலிக் (எ) சல்மா இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கமல் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.தி.மு.க., சார்பில் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்களில் வில்சனுக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்படுகிறது. தொ.மு.ச., நிர்வாகி சண்முகம், அப்துல்லா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.புதிய வேட்பாளர்கள் யார்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர். பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். 2006ல் தி.மு.க., சார்பில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு முறை பனமரத்துப்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

SVR
மே 29, 2025 07:02

இந்த மூர்க்கணுக்கெல்லாம் ராஜ்ய சபா சீட். படு கேவலம். அப்படி என்ன சாதிச்சுட்டாரு இந்த ஆளு ராஜ்ய சபா போவதற்கு? அங்க போய் என்னகிழிக்கப்போறார்ன்னு பார்ப்போம். மத்தியில் உள்ள பாஜக விற்கு ஒரு வேண்டுகோள். இந்த ஆள் வாயத் திறந்தா அதை உடனே தகர்கவும். ஒரு மண்ணாங்கட்டி தெருப்புழுதியும் இந்த ஆளுக்கு தெரியாது. தெரிஞ்சா மாதிரி பாவ்லா பண்ணுவாரு. உங்களது வாதத்தை வைத்து இந்த ஆளை தோற்கடிக்கவும். மறுபடியும் இந்த ஆள் பேசாதபடிக்கு. செய்யவும்.


Tamilnews
மே 28, 2025 16:54

ராசாக்களே பார்த்து .. நாயகன் டெல்லி போறாரு ..


மூர்க்கன்
மே 28, 2025 17:00

ரங்கராய நாயக்கன் சக்திவேலு ...தக் லைப் ஸ்டார்ட்டட் .


V.Mohan
மே 28, 2025 16:38

அடித் தொண்டையில் கரகரப்பாக கமல் பேசினால்,மைக்கின் மொழிபெயர்ப்பு பட்டனை அனைவரும் ஆஃப் செய்து விட்டு சற்று நேரத்தில் கை தட்ட ஆரம்பிப்பார்களோ? அது சரி எந்த சப்ஜெக்ட் பத்தி பேசுவார் கமல்? கஷ்டப்பட்டு ராஜ்யசபா சீட்டு வாங்கினதைப்பற்றியா? அல்லது ஸ்டாலின் உதயநிதி யார்களின் நல்லாட்சி பற்றியா?கமல் எதுக்கும் ஸ்டிரெப்ஸில் மாத்திரை கை வசம் வச்சிகிட்டீங்கன்னா நல்லது.


Mani . V
மே 28, 2025 16:29

ஒரு பைத்தியத்தை அனுப்புவதை நினைத்தால் பரிதாபம்தான் ஏற்படுகிறது. இது பகலில் டார்ச் லைட்டை அடித்து, டிவியை தூக்கிப் போட்டு உடைக்கும்.


Jayaraman Ramaswamy
மே 28, 2025 15:39

கமலஹாசனை அரசியல்வாதியாக நினைத்து பலரும் கருத்து பதிவு இடுகின்றனர். அவர் முழு நேர நடிகர் என்பதை நினைவில் கொள்ளவும். ராஜ்யசபா MP பதவி என்பது, அவருடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சி ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்து பதவி வாங்கிவிட்டார். மிக நல்ல மனிதர் போல் நன்றாக நடிக்கிறார்.


Bhaskaran
மே 28, 2025 15:14

தனக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதற்காக மன்னிப்புக் கேள் மன்னிப்பு கேள் கனிமொழியின் மன்னிப்பு கேள் என்று எவ்வளவு கீழிறங்கி கோஷம் போட்ட சைக்கோ கோவாலுக்கு அல்வா தந்த முதல்வர் வாழ்க பல் இல்லாத காரணத்தால் சொல்போன புலி இனி கொள்ளு பேரகுழந்தைகளை கொஞ்சிக் கொண்டு கலிங்கப்பட்டியில் இருக்க வேண்டியதுதான் போலிருக்கு .எவ்வளவு உயர்ந்த இடத்தில் இவரை தமிழ்மக்கள் தம் மனதில் வைத்திருந்தனர் பதவி ஆசை இப்படி ஆக்கிவிட்டது


vbs manian
மே 28, 2025 15:05

அப்படி சிறகடித்து பறக்கவும் வேண்டாம். இப்படி தலைகுப்புற விழவும் வேண்டாம்.


R.SANKARA RAMAN
மே 28, 2025 14:58

இரண்டு கிறிஸ்துவர்கள் கவலையும் சேர்த்து


SUBRAMANIAN P
மே 28, 2025 14:35

கமலைப்போல ஒரு பிறவையை அரசியலில் இதுவரை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.


ஆரூர் ரங்
மே 28, 2025 14:28

பிஜெபி இப்பவே ஸ்மிருதி இரானி க்கு ராஜ்யசபை சீட் கொடுக்க வேண்டும். காமஹாசன் தலை தெறிக்க ஓடிவிடுவார்.


மூர்க்கன்
மே 29, 2025 14:34

ஆமா ஆமா அந்த மைனாவை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு நம்ம தலீவரு குதூகலிப்பாரு??


முக்கிய வீடியோ