உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் நாம் தோற்கவில்லை கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்

தேர்தலில் நாம் தோற்கவில்லை கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்

சென்னை: சென்னையில் நேற்று சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், 'தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்; குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்' என, கமலிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: நான் வீரத்திற்கு நெஞ்சை காட்டுவேன்; துரோகத்திற்கு முதுகை கூட காட்ட மாட்டேன். நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம். எனக்கு வயதாகி விட்டதால், கட்சி துவக்கியதாக சிலர் கூறினர். எனக்கடுத்து கட்சியினர் தான் பிள்ளைகளாக இருக்கின்றனர். தமிழக நலனுக்காகத்தான் கட்சியை துவக்கினேன். பூத் கமிட்டிகளை சரியாக அமைக்க வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் ஏமாற்றி விட்டனர். ஆசியாவில் முதல் நடுநிலை கட்சி ம.நீ.ம., தான். இதை நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன். ஒரே நாடு தான். இதை இடது, வலது என பிரித்து சொல்லக்கூடாது. எனக்கு பின்னாலும் கட்சி இருக்க வேண்டும். அதனால் தான் தலைவர்களை நான் உருவாக்குகிறேன். ஜாதி என்பது எனக்கு இடையூறாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கு, 5,000, 10,000 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு விடாதீர்கள்; ஓட்டு போடாமல் வீட்டில் இருப்பது தேசத் துரோகம். இவ்வாறு கமல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை