உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு;தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தல்

காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு;தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில், யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியையும் சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிடும்படி தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:மதுரை காமராஜ் பல்கலை சட்ட விதிமுறைகளின்படி புதிய துணைவேந்தர் தேடுதல் கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். அதில், வேந்தர், சிண்டிகேட் பிரதிநிதி, செனட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின்படி இந்த கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது.டிச.,16ம் தேதியிட்ட கடிதத்தில் இதற்கான உத்தரவை தமிழக அரசுக்கு கவர்னர் வழங்கியிருந்தார். கவர்னரின் பிரதிநிதியை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவும் கூறியிருந்தார்.ஆனால், ஜன.,9ல் உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இடம் பெறவில்லை. இது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மீறிய செயல். யு.ஜி.சி., ஒழுங்குமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையில் செய்யப்படும் துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.எனவே, தமிழக அரசு, அந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். வேந்தர் நியமித்தபடி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியை கொண்ட தேடுதல் குழு நியமித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

AMLA ASOKAN
ஜன 31, 2025 10:30

ஆளுநர் ரவிக்கு தனக்கு கீழ் தான் யூனிவர்சிட்டி இயங்கவேண்டும் என்பது முக்கியம். இது நாள் வரை எப்படி இவைகள் இயங்கின? வாடகை வீட்டுக்குள் நுழைந்தவன், இது என் வீடு என்பது போல் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டால் என்ன? கல்விக்கூடமா, அதிகார போட்டியா என்பது தான் இன்றைய பிரச்சினை. நீதிமன்றத்தின் தீர்ப்பு கண்ணுக் கெட்டியவரை தெரியவில்லை .


Kasimani Baskaran
ஜன 30, 2025 22:53

திராவிடம் துள்ளினாலும் குதித்தாலும் கவர்னர் சுண்ணாம்பு தடவி விட்டார். சிறப்பு.


ஆரூர் ரங்
ஜன 30, 2025 22:14

UGC தருகிற மானியம் மட்டும் வேணும். ஆனா கப்பம் வசூலிக்கிற ஆள் எங்க ஆளாத்தான் இருக்கணும்.


முக்கிய வீடியோ