உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்

முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்

மதுரை: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் குன்றம் காக்க கோயிலை காக்க என்ற தலைப்பில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் மனமுருகி பாடிய கந்த சஷ்டி கவசம் மொத்தமாக சோஷியல் மீடியாக்களில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பம், ஒரு கோடிக்கு மேலான பார்வையை கடந்துள்ளது.

அதிர்ச்சி

மாநாட்டின் இந்த தாக்கம் தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை முருக பக்தர்கள் மாநாடு, பல்வேறு சவால்களுக்கு இடையே பிரமாண்டமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் பங்கேற்றவர்களை கடந்து முகநுால், எக்ஸ் தளம், யு டியூப் சேனல்கள் மூலம் பல லட்சம் பேரை, மாநாடு செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, மாநாட்டில் பங்கேற்றோர் அனைவரும் இணைந்து, ஒரே நேரத்தில், ஒரே குரலாக கந்த சஷ்டி கவசம் பாடியது, சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரு கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது ஹிந்து தலைவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டை முழுமையாக யுடியூப் வழியாக பார்வையிட்டுள்ளனர்.

சாதனை

அனுமதி பெற்ற டிவி சேனல்கள், யூ டியூப் சேனல்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நேரலையில், மாநாட்டை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இது ஒரு பிரமாண்ட சாதனை. ஆன்மிகத்திற்கு என ஒரு சக்தி உள்ளது என்பதை இம்மாநாடு நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M. PALANIAPPAN, KERALA
ஜூன் 24, 2025 10:51

இறை பக்தி என்பது தமிழக மக்களின் ஆத்மாவுடன் இணைந்தது, அதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது


venugopal s
ஜூன் 24, 2025 10:50

பாஜகவினர் புதுமையாக கந்த சஷ்டி கவசத்தை ஹிந்தியில் பாடி இருந்தால் இந்நேரம் நூறு கோடி பேர் பார்த்து லைக் பண்ணி இருப்பார்கள்!


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 20:26

உங்களை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப அந்த 1 கோடி பேர் போதும்.


SIVA
ஜூன் 25, 2025 08:42

இப்படியே பேசி கொண்டு இருங்கள் தமிழகத்தில் பிஜேபி வாக்கு 20% ஐ நெருங்கி விட்டது , நீங்க விவரமா செயல் பட ஆரம்பித்தால் பிஜேபி வளர்ச்சி வேகம் தடை படும் , பிஜேபி ஆட்சியை பிடித்த பின் அந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் கட்சி பெரும் அளவில் வலுவாகவேய உள்ளது , காங்கிரஸ் போன்று ஆட்சியை இழந்த பின் காணாமல் போய் மற்ற கட்சிகளுக்கு அல்லக்கை போன்று செயல்படுவது இல்லை ...


V RAMASWAMY
ஜூன் 24, 2025 08:47

கழகக் கண்மணிகளே, கண்ணிருந்தும் குருடர்களாக செயல்படுகிறீர்களே, பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்ற போர்வையில், பகுத்தறிவு இல்லாமலும் மூட நம்பிக்கையிலும் நல்ல நம்பிக்கைகளை வாழ்வுக்கு வளம் தரும் வழிகளை துறந்து சுயநல அரசியல்வாதிகளின் வலைகளில் வீழ்ந்து வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள், அவர்களின் வளத்துக்கும் நலத்துக்கும் துணை போய்க்கொண்டு உங்களின், உங்கள் சந்ததிகளின் வாழ்க்கையை துயரமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். 2026 ஒரு வழி காண்பிக்கிறது, அப்பொழுதாவது திருந்துங்கள், நலம் காண்பீர்கள். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:13

உடன்பிறப்பே இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள் ,,அவர்களை மாற்றுவது கடினம் ..இனிபகுத்தறிவு கோஷம் எடுபடாது ,உடனே கோஷத்தை மாற்றுங்கள் .. , இந்துக்கள் ஓட்டை பெற காவடியெடுங்கள் ..தீ மிதியுங்கள் ...அங்கபிரதச்சனம் செய்யுங்கள் ... அப்படியே நிதியையும் வசூலித்து அனுப்பிடுங்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை