உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பர், கண்டதேவி கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

நெல்லையப்பர், கண்டதேவி கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ஆனிப் பெருந்திருவிழா ஜூன்., 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து வழிபட்டனர். திருநெல்வேலியில் 4 ரத வீதிகளிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

கண்டதேவி கோவில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆனி தேரோட்டம் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் 1998ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.அதன் பின்னர், ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆனி திருவிழா ஜூன் 30ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று தேரோட்டம் தொடங்கி உள்ளது. தேரோட்டத்தை ஒட்டி, கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜாதிரீதியான அடையாளங்கள், ஆடைகள் அணியக்கூடாது, வெள்ளை நிற வேட்டி, சட்டை மட்டுமே அணிய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

GMM
ஜூலை 08, 2025 13:10

சுதந்திரம் முன்னும் பின்னும் பல சாதி பிரச்சனைகள் உருவாக்க பட்டன. குற்றாலம் அருவியில் காந்தியால் சாதி பிரச்சனை? முன்பு ஓட்டலின் பிராமின் சாப்பிடும் இடம் என்ற தனி டேபிள் இருக்கும். சில ஒழுங்கு பின்பற்றி வாழும் சாதி வீதியில் வெளி நபர் செருப்பு அணிந்து செல்வது இல்லை. தற்போது அனைத்தும் மறைந்தன. ஸ்டாலின் அனைவருக்கும் ஓட்டுரிமை போல் அர்ச்சகர் உரிமை கொடுத்து விட்டார். சாதி குழப்பம் தீர கூடாது. பெரியார் சாதி ஒழிப்பு போர்வையில் சாதி வளர்ப்பு, காங்கிரஸ் சிறுபான்மை மத அந்தஸ்து போர்வையில் மத மாற்றம் . வழிபாட்டு முறையில் ஆன்மிக வழிகளில் வாழும் நபர், சமூகம் முதல் மரியாதை பெறும்.


GMM
ஜூலை 08, 2025 11:56

பல ஆண்டுகளாக பல ஊர்களில் சண்டை சச்சரவு இல்லாமல் திருவிழா நடைபெறும். திராவிட இயக்கம் தான் வழிபாட்டு இடங்களில் சாதி பிரச்சனையை உருவாக்கியது. இதில் மத மாற்றிகள் பங்கும் உண்டு. ஒவ்வொரு சாதியும் ஒரு நாள் விழா கொண்டாடி வந்தனர். அந்த ஊரில் ஒரு சாதியினர் அதிகரிக்கும் போது அவர்கள் கொண்டாட அனுமதிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த இயல்புகள் இல்லாத சாதிகள் சாதி ஒழிப்பு என்ற போர்வையில் மோத விடுவது திராவிடர் குணம். இங்கு தான் கலகம் உருவாக்கப்படும். போலீஸ் பாதுகாப்பு தேவைபடும்.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூலை 08, 2025 12:40

உண்மை இல்லாத கருத்து இந்த பிரச்சனை சுதந்திரத்திற்கு முன்பு இருந்து நீடித்து வருகிறது.


தத்வமசி
ஜூலை 08, 2025 11:51

ஜாதிகளை ஒழித்ததாக கணக்கு காட்டும் திராவிடத்திற்கு இது தெரியுமா? அதிக எண்ணிக்கை கொண்ட ஜாதியை சேர்ந்த மக்களின் தொகையை வைத்து தேர்தல் வேட்பாளர் அந்த ஊரில் நிறுத்தப் படுகிறார். இதில் ஜாதியை மக்கள் மறப்பது எப்படி? பிறப்பு, கல்வி, வேலை, இலவசம் என்று அனைத்திலும் ஜாதியே முக்கியத்துவம் பெரும் நாட்டில் ஜாதியை ஒழிப்பது என்பது தலையை மண்ணுக்குள் புதைத்து உலகம் இருண்டு விட்டது என்று கூறுவது போலத் தான். இதில் போலி பிராமண எதிர்ப்பு நாடகம் வேறு.


Keshavan.J
ஜூலை 08, 2025 11:24

இன்னும் கொஞ்ச நாளில் வெறும் ... தான் ஊர்வலத்திற்கு வரணும்.


BHARATH CHIDAMBARAM
ஜூலை 08, 2025 10:55

PEACEFULLY SHOULD HAPPEN THIS TIME. ALL COOPERATE.


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 10:30

பெரியார் தீண்டாமையை ஒழித்தார்ன்னு திராவிஷ ஆட்கள் பிரச்சாரம் செய்வது பொய்யா கோபால்? கண்டதேவியில் அடித்துக் கொள்வது உயர்சாதி மக்களல்ல. பெரியாரால் முன்னேறியதாகக் கூறப்படும் சாதிகள்?.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூலை 08, 2025 10:28

இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை என்பது பாரபட்சமான கருத்து. பட்டியல் இன மக்களை தேர் படம் பிடிக்க விடாமல் செய்த நாட்டார்கள் செயலால் தான் பிரச்சனை. இது இன்று நேற்றைய பிரச்சனை அல்ல காந்தி அடிகள் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தும் கூட நாட்டார்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.


Gnana Subramani
ஜூலை 08, 2025 09:51

ஏன் இந்துக்களுக்காக போராடும் பிஜேபி இங்கு சமாதானம் செய்ய வரவில்லை


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 10:27

நிலவுடைமை நடுச்சாதி ஆட்கள் கடைபிடிக்கும் தீண்டாமை, திராவிட அரசியலால்தான் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. பிஜெபி யில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் மத்திய மாநில தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தி.மு.க அதிமுக வில் அது சாத்தியமேயில்லை.


Mettai* Tamil
ஜூலை 08, 2025 11:36

தமிழ்நாட்டில் 60 வருசமாக சமஸ்தானத்தில் இருக்கும் திராவிட கட்சியான உங்களைப்போன்ற பல ஊழல் பிரிவினைவாதத்தில் ஊறிய மட்டைகளிடம் சமாதானம் செய்வது கொஞ்சம் சிரமம் தான் .


AMMAN EARTH MOVERS
ஜூலை 08, 2025 09:35

விடியா திராவிட கட்சியும் முருகன் மாநாடு நடத்தி மக்களை ஏமாற்றும் கட்சிகளும் இரு மக்களும் சமம் என்று ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த ஏன் முன் வரவில்லை


Keshavan.J
ஜூலை 08, 2025 11:21

சமாதானம் செய்தால் வோட்டு வூத்திக்கும் .


சமீபத்திய செய்தி