உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரம்; பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

மாணவிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரம்; பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுார் அருகே அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விவகாரத்தில், அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேலுார் காங்கேய நல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், படிக்கும் மாணவியர் சிலர் இன்ஸ்டா கிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கத்திற்கு ஆளான மாணவியர் பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.இந்த விழாவிற்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவியர் தெரியாமல் செய்துவிட்டோம் என கூறினர். தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதன்மை கல்விஅலுவலர் மணிமொழியிடம் சமர்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளி மாணவியரின் வகுப்பு ஆசிரியை சாமூண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வல்லவன்
செப் 21, 2024 15:48

இனி வரும் காலங்களில் பள்ளியிலேயே காதல் கல்யாணம் முதலிரவு வளைகாப்பு மற்றும் குழந்தை கூட பிறக்கும் நாசமா போங்கள் என்று வாழ்த்த வேண்டியதுதான்


kulandai kannan
செப் 21, 2024 12:37

தமிழக கல்வித்துறை சந்தி சிரிக்குது.


rasaa
செப் 21, 2024 12:35

சமீபகாலமாக மாணவிகளின் போக்கு மிகவும் கீழ்த்தரமாக மாறிவிட்டது. குடி, போதை, புகை, ஆண் நண்பர்கள் உறவு. ஒன்று சொல்கின்றேன். வரும் காலத்தில் கன்னித்தன்மையுள்ள , வர்ஜினிடி, ஆண், பெண் திருமணம், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கே கிடைக்கும்.


அ.ஸ்வின்
செப் 21, 2024 12:20

தீ கொழுப் பெடுத்து திரியுது க அதுக்கு டீச்சர் பலிகடாவா அட ஈன பிறவிகளே


R.MURALIKRISHNAN
செப் 21, 2024 10:47

மண்டையில் களிமண் உள்ளவன் கூட இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டான். நல்லவேளை, பள்ளிக்கூடத்தில் நடந்துள்ளது என்று பள்ளிக்கூடத்தை கட்டிய என்ஜினீயர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களே. தவறு மாணவிகள் செய்தது


Kanns
செப் 21, 2024 10:32

Why Not Expel & Punish such Main Hungry Women Criminals


raja
செப் 21, 2024 10:12

திராவிட மாடல் ஆட்சியில் நடிகர் உதையி ரசிகர் மன்ற தலைவர் பள்ளி கல்விக்கு அமைச்சராக இருப்பதால் ஆசிரியரும் மாணவிகளும் நடிப்பதில் தவறேதும் இல்லை...


Barakat Ali
செப் 21, 2024 09:22

நியாயமா பார்த்தா மகேசுக்கு இந்த விஷயத்துக்காகத்தான் கோபம் வரணும் ..... வருதான்னு பார்ப்போம் ........


SIVA
செப் 21, 2024 08:47

மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமால் ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் , அந்த ஆசிரியர் பள்ளி கல்வி துறை அதிகாரி மீது புகார் அளிக்கலாம் அல்லது வழக்கு தொடரலாம் , ஏண்டா உங்களுக்கு மாணவர்களை திட்ட கூடாது , அடிக்க கூடாது , மனம் வருந்தும் படி பேசக்கூடாது , ஆனால் அவங்க நல்ல பசங்களா வரணும் .....


karunamoorthi Karuna
செப் 21, 2024 08:46

ஆசிரியர் மீது நடவடிக்கை தேவை இல்லை மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆசிரியர் மாணவிகளை திட்டுவது அடிப்பது கண்டிப்பது நடந்தால் ஆசிரியர் மீது பெற்றோர் புகார் கொடுப்பார்கள் ஆசிரியர் கண்டித்தால் மாணவிகளின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடக் கூடாது என்று கேள்வி கேட்டு ஹேப்பி ஸ்டீரிட் கூட்டம் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை