உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தைவான் பெண்ணை கரம் பிடித்த காரைக்குடி இளைஞர்

தைவான் பெண்ணை கரம் பிடித்த காரைக்குடி இளைஞர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பாதரக்குடியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும், தைவான் நாட்டை சேர்ந்த மணப்பெண் ஹோ ஹசின் ஹீய்க்கும் இன்று காரைக்குடியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியை சேர்ந்த ஆறுமுகம் அமுதா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சதீஷ்குமார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தைவான் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பணிபுரிந்து வந்தார் அப்போது சதீஷ்குமார் பணிபுரியும் நிறுவனத்தின் அருகே உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்த தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோ ஹசின் ஹீய்க்கும் நட்பு ஏற்பட்டது. அது காதலாய் மாறியது. இந்நிலையில் பணி மாறுதல் காரணமாக சதீஷ்குமார், அமெரிக்காவில் தற்போது பணிபுரிந்து வருகிறார். அவர் தனது காதலியான ஹோ ஹசின் ஹீய்வை திருமணம் செய்து வைக்க தனது பெற்றோரிடம் கூறினார். இருவர் வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று காலை காரைக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தைய்வான் நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள் வேஸ்டி சட்டையுடன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:55

இவர்களின் குழந்தை கமலா ஹாரிஸ் போல் ஆகிவிடும்


sankaranarayanan
நவ 17, 2024 13:45

தாய்வான் நாட்டில் பிறந்த ஒரு தாய்க்கும் பாரதத்தில் பிறந்த ஒரு தந்தைக்கும் திருமணம் முடிந்து அமெரிக்காவில் அவர்களுக்கு ஒரு அமெரிக்க பிரஜை உண்டாகட்டும் வாழ்த்துவோம்


வாய்மையே வெல்லும்
நவ 17, 2024 13:09

மங்களகரமான மணப்பெண் வாழ்க வளமுடன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை