உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.''தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீர் திறக்க முடியாது. வினாடிக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்படும்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pioptmz6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரி விவகாரத்தில் சித்தராமையா பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், துரைமுருகன் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ளது. கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது 4 ஆயிரம் கனஅடி தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவதா அல்லது கடிதம் எழுதுவதா என முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். கர்நாடகா கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை பெய்தால் தண்ணீர் வந்து தானே ஆக வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு பிரச்னையைக் கையாண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நாளை (ஜூலை 16) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கர்நாடகா அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடகா அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

s chandrasekar
ஜூலை 23, 2024 06:12

தமிழக காங்கிரஸ் தமிழ்நாடு மந்திரி சபையில் இடம் கேட்கவேண்டும் . செல்வபெருந்தொகை இதை செய்யும் தகுதி உள்ளவர் ,அஞ்சாநெஞ்சர் ,காந்தி வழியில் அரசியல் செய்பவர் .


Nehru Police
ஜூலை 22, 2024 14:56

மன்னர் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியில் தான் இருப்பார்கள். உங்க வீரத்தை தமிழ்நாட்டு மக்களிடம் மட்டும் காட்டுங்க மற்ற மாநிலங்களில் காட்டாதீங்க


arunachalam
ஜூலை 21, 2024 14:34

தீமுகா இருக்கிற வரைக்கும் தமிழகம் உருப்படாது. ஆனா தேர்தல் நேரத்தில் காசு குடுத்து எந்த தமிழனையும் விலைக்கு வாங்கிடலாம். மக்களவை 40க்கு 40ம், விக்கிரவாண்டி தொகுதியும் சாட்சி. அனுபவியுங்கடா


Sundarraj
ஜூலை 18, 2024 21:21

ஹிந்து கூட்டணி தானே ராகுல் காந்தி யிடம் சொல்லுங்கள் பத்து எம்பிசீட்சும்மாகொடுத்தீங்கள்ள


Sundarraj
ஜூலை 18, 2024 20:41

நீங்க தானே அவர்களுக்கு 10எம்பி சீட் கொடுத்தீங்க இப்ப போய் கெஞ்சுங்க


இராம தாசன்
ஜூலை 18, 2024 20:31

பார்த்து - pallu படமா பக்குவமா சொல்லுங்க.. அவங்க கோவிச்சுக்க போறாங்க


Ramesh Sargam
ஜூலை 18, 2024 10:39

கர்நாடகாவில் உங்கள் தோழமை கட்சி காங்கிரஸ் ஆட்சிதானே நீங்கள் ஏன் அவர்களிடம் தோழமையாக பேசி தண்ணீர் பெறக்கூடாது..??


Kathiravan
ஜூலை 18, 2024 22:29

ஏன் இதற்கு முன்பு பாரதிய ஜனதா ஆட்சி தானே இருந்தது அப்போது கேட்காமல் கொடுத்து விட்டார்களா... பதில் சொல் உத்தமனே


K.Muthuraj
ஜூலை 22, 2024 09:40

கதிரவன். பி ஜே பி இருக்கும் வரை சற்று குறைவாக இருந்தாலும், நீர் வந்து கொண்டுதான் இருந்தது. அதனையே அரசியலாக்கிதான் காங்கிரஸ், கர்நாடகாவில் ஒவ்வொரு மேடையிலும் பேசி வந்தது. காங்கிரஸ் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.


s chandrasekar
ஜூலை 23, 2024 06:08

கெட்டிக்காரன் எப்படி மடை மாத்துகிறாய் . கள்ளக்குறிச்சி போய் ரெஸ்ட எடு என் செல்லமே .


tmranganathan
ஜூலை 17, 2024 17:45

ராஜினாமா செய்துவிட்டு காட்பாடிக்கு போய்விடுங்க.... கொள்ளை அடித்துக்கொள்வார்.


N.Palaniyappan
ஜூலை 17, 2024 16:20

Super.


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 11:05

நீங்கெல்லாம் எந்த நீதி மன்றத்தின் உத்தரவை மதிச்சுருக்கீங்க ஏம்ப்பா துரை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை