உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்: ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை தொடக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்: ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை தொடக்கம்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இன்று விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், உடனே சிறப்பு புலனாய்வு குழு வசம், கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் இன்று (அக் 05) இந்த வழக்கில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது. இதுவரை விசாரணை நடத்தி வந்த, விசாரணை அதிகாரி பிரேம் ஆனந்த் வழக்கின் கோப்பு மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.,யிடம் ஒப்படைத்தார். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். ஐ.ஜி., அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் மேலும் 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த குழுவினர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சம்பவ நடந்த வேலுச்சாமிபுரத்தில் இருந்து இன்று விசாரணை தொடங்கி உள்ளனர். இவர்கள் விசாரணை நடத்தி முடித்து, தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள். பிறகு இந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

45 நிமிடங்கள் ஆய்வு

வேலுச்சாமி புரத்தில் 45 நிமிடங்கள் ஆய்வு பிறகு ஐஜி அஸ்ரா கார்க்: தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளோம். ஆய்வு செய்தோம். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உள்ளோம். இது தொடர்பாக தற்போது ஏதுவும் கூற முடியாது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் என்னுடன் 2 எஸ்பி.,க்கள், ஒரு கூடுதல் எஸ்பி, 2 டிஎஸ்பி.,க்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேல் முறையீடு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் முன்ஜாமின் கோரி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இன்று இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rajah
அக் 05, 2025 14:18

இன்றைய இளைய தலைமுறையினரை டாஸ்மாக் கலாச்சாரதிற்கு இட்டுச் சென்றவர்களுக்கு


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 05, 2025 14:16

காவல் துறை அந்த இடத்தில் இடம் ஓதுக்கியதே தவறு என்று ஒரு குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரி விசாரித்தால் எப்படியும் காவல் துறை நேர்மையின் சின்னம் என்றுதானே தீர்ப்பு வரும்.


சேகர்
அக் 05, 2025 22:39

காவல் துறை அந்த இடத்தை ஒதுக்கிய உடன், கட்சி ஒத்துகொண்டது என்று தெரியாதா?


Rajah
அக் 05, 2025 13:36

அவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


Barakat Ali
அக் 05, 2025 12:43

தமிழக அரசுக்குச் சங்கடம் ஏற்படுத்தக்கூடிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் ....


ஆரூர் ரங்
அக் 05, 2025 13:04

MGR வீராணம் ஓட்டைக் குழாய்களை அப்படியே சாலை ஓரங்களில் விட்டுவைத்தது இதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதற்காகதான்.


திகழ்ஓவியன்
அக் 05, 2025 12:31

பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட தெரிந்த உனக்கு உன்னை நம்பி வந்தவங்களுக்கு 10 ரூபாய் வாட்டர் பாட்டில் வாங்கி கொடுக்க துப்பு இல்லையே... அய்யா இவரை விடாதீர்கள்


Kumar Kumzi
அக் 05, 2025 13:39

ஊளையிடும் கொத்தடிமை கூமுட்டையின் சிறந்த முட்டு


ஆரூர் ரங்
அக் 05, 2025 12:30

செயற்கை நெரிசல்? விஞ்ஞான முறைப்படி.


Chandru
அக் 05, 2025 12:28

முடிவு அனைவர்க்கும் தெரிந்ததே


ManiK
அக் 05, 2025 12:07

விசாரிக்க வேண்டிய உள்ளூர் முக்கியஸ்தர் கிட்ட பதமா விசாரிங்க. உடனே கேஸ் க்லோஸ் ஆகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை