உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து, இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8:27 மணியளவில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* ரயில் எண்.16111 திருப்பதி - புதுச்சேரி ரயில்.* ரயில் எண்.16112 புதுச்சேரி - திருப்பதி ரயில்.* ரயில் எண்.16203 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண். 16204 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்* ரயில் எண்.16054 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், * ரயில் எண்.16057 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.16058 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.16401 அரக்கோணம் - புதுச்சேரி ரயில்,* ரயில் எண்.16402 கடப்பா - அரக்கோணம் ரயில்,* ரயில் எண்.06727 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.06728 திருப்பதி - சென்னை சென்ட்ரல் ரயில்,* ரயில் எண். 06753 அரக்கோணம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.06754 திருப்பதி - அரக்கோணம் ரயில்.* ரயில் எண்.12711 விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.12712 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.06745 சூலூர்பேட்டை - நெல்லூர் எக்ஸ்பிரஸ்,* ரயில் எண்.06746 நெல்லூர் - சூலூர்பேட்டை எக்ஸ்பிரஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
அக் 12, 2024 22:03

மிக சின்ன விபத்துதான். பீதி வாணாம். முருகர் சொல்லிட்டாரு.


Ramesh Sargam
அக் 12, 2024 21:17

சதியாக இருந்தால், அந்த சதியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடுமையாக, மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும். ஊழியர்களின் கவனக்குறைவாக இருந்தால், அவர்களை பாரபட்சம் பார்க்காமல் உடனே பணியில் இருந்து நீக்கவேண்டும். ரயில் கோச்சுகள், ரயில் என்ஜின்கள், தண்டவாளங்கள் இவை எல்லாம் முறையாக தினம் தினம் பராமரிக்கப்படவேண்டும். பயணத்தின்போது சந்தேகப்படும் நபர்களை railway protection force அதிகாரிகள் பிடித்து விசாரித்து, அவர்கள் சதிகாரர்கள் என்பது நிச்சயமானால், அவர்களை முறையாக சிறையில் அடைத்து மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும்.


தமிழ்வேள்
அக் 12, 2024 14:15

பாயிண்ட்கள் எலக்ட்ரோ மெக்கானிக்கல் சாதனங்கள்.. சிக்னல்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள்.. இவற்றுக்கு இடையில் சரியான ஒத்திசைவு இல்லாமல் இருப்பது தான் இம்மாதிரி விபத்துகளுக்கு காரணம்...வேகம் குறைவாக இருப்பினும் ஸ்டேஷன்களில் மேனுவல் பாயிண்ட்/ சிக்னல் சிஸ்டம் பாதுகாப்பான ஒன்று.. பணியாளர் எண்ணிக்கை கூடும் என்பதால் நூறு சதவீதம் தானியங்கி முறைக்கு மாறுவது விபத்துகளை தவிர்க்காது...


Barakat Ali
அக் 12, 2024 21:47

முற்றிலும் சரியான கருத்து .... இந்திய ரெயில்வேயை முழுமையாக ஆட்டோமேஷனுக்கு மாற்ற முடியாது .... தேவையும் இல்லை ....


Prakash Mahadevan
அக் 12, 2024 12:31

கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் ரயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளதா ஆனால் திருவள்ளூர் வழியாக திருப்பதி ரெயில்கள் ஏன் ரத்து?


Sudha
அக் 12, 2024 12:29

அப்பா ராகுலு, உன்கிட்ட நல்ல டிரைவர் இருந்தா அனுப்பி வை கிளம்பியது உன்னோட ஸ்டேட் ல அச்சிடேன்ட் ஆனது உன்னோட தோஸ்த் ஊர்ல. இந்த நாட்டில 140 கோடி பேர் இருக்காங்க உன்னோட இத்தாலி மாதிரி இல்ல


raja
அக் 12, 2024 10:02

சின்ன கொமாலியும் பெரிய கொமாலியும் மீட்பு பணிகளில் காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அவேற்களின் தொப்புள் கொடி உறவுக் கைவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை...ஏனென்றல் இந்த மாடல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகம் பயங்கரவாதிகள் சதி வேலைகள் செயல் படுத்தும் மற்றும் திட்டங்கள் தீட்டும் கூடாரம் ஆகிவிட்டது என்று மக்கள் என்ன ஆரம்பித்து விட்டார்கள்....


சாண்டில்யன்
அக் 12, 2024 08:15

சென்னை மெட்ரோவின் உபயமாக மூன்று எந்திரங்கள் வந்துள்ளன ஆனாலும் ரயில்வே கிரேன் போல அலேக்காக தூக்கி அப்பால் வைக்க முடியாது உருட்டி புரட்டி தள்ளத்தான் முடியும் பெட்டிகள் சேதமாகும் எப்படியோ வேலை முடிந்தால் போக்கு வரத்து சீரானால் சரி ரயில்வே என்னாச்சுன்னு புரிந்து கொள்ள திணறியபோது, ஜென்மப்பகை தமிழ்நாடு திருட்டு திராவிஷ அரசின் காலத்தினால் செய்த முதலுதவி ஏற்பாடுகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்னவோ வரவேற்கத்தக்கது


Barakat Ali
அக் 12, 2024 21:49

தரக்குறைவான, முதிர்ச்சியற்ற கருத்து ......... விமர்சனங்களை சந்திக்கத் திராணியில்லாமல் மோதல்போக்கைத் துவக்கியது மாநில அரசு ........அதைத் தொடர்வதும் மாநில அரசு .....


jayvee
அக் 12, 2024 08:11

பாயிண்ட்ஸ் ஆளை பிடித்து விசாரித்தால் உண்மை வெளி வரும்.. இது சிகப்பா அல்லாத பச்சயா என்று


J.Isaac
அக் 12, 2024 14:07

ஏன் இருக்கக்கூடாது


புதிய வீடியோ