உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனவுகளை விடாமல் துரத்த வேண்டும்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்

கனவுகளை விடாமல் துரத்த வேண்டும்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை துரத்த வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார். டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் பகுதி, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில், கவர்னர் ரவி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மாணவர்களிடம் அவர் பேசியதாவது: மாணவ பருவத்திலேயே நாட்டின் மிக முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது சிறப்பு. இது, உங்களுக்கும், நாட்டுக்கும், பெருமையும், கவுரவுமும் தரும் விஷயம். இதற்காக, நீங்கள் பல தடைகளை கடந்து வந்திருப்பீர்கள். நான், தேசிய மாணவர் படையில் இருந்தபோது, நல்லொழுக்கத்தை கற்றேன்; அது, தற்போது வரை எனக்கு பயன்படுகிறது. தினமும் அதிகாலை எழுவது, என் படுக்கையை நானே மடிப்பது அல்லது சுத்தம் செய்வது, யோகா, உடற்பயிற்சி செய்வது, எதையும் ஒழுங்குடன், குறித்த நேரத்தில் செய்வது என, அனைத்து பழக்கங்களும் தேசிய மாணவர் படையில் இருந்தபோது அளிக்கப்பட்டவை. நீங்கள் மிக முக்கிய பருவத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்கட்டும். அதற்கான முயற்சிகள், உழைப்பு போன்றவற்றை பெரிதாக கொடுங்கள். உங்கள் கனவு எதுவானாலும், அதை விடாமல் துரத்துங்கள். வாய்ப்புகளுக்காக ஓடுங்கள். 'விக்சித் பாரத்' எனும் வளர்ந்த பாரதம், உங்கள் ககைளில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal S
பிப் 04, 2026 13:38

இவர் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தமிழக அரசை விடாமல் துரத்திக் கொண்டே இருப்பது போலவா?


ஜகன்
பிப் 04, 2026 06:31

இவுரு கெவுனர் ஆவணும்கற கனவை உடாமா துரத்தி, இப்போ கெவுனராகவே இருக்கணும்னு கனவில் இருக்காரு.


guna
பிப் 04, 2026 07:54

ஒரு கொத்தடிமை ஜெகன் அப்பாவி போல பேசுது


mindum vasantham
பிப் 04, 2026 06:05

ஈகுவாலிட்டி போன்றவையும் சொல்லி கொடுங்கள்


Senthoora
பிப் 04, 2026 05:09

இதைத்தானே அப்துல் கலாம் ஐயா எப்பவோ சொல்லிட்டுபோய்ட்டார்.


vivek
பிப் 04, 2026 06:50

அதனால் senthoora தினமும் இருநூறு ரூபாய் கிடைக்கும் என்ற கனவில் இருக்கிறார்


Kasimani Baskaran
பிப் 04, 2026 04:12

அருமை. எளிதில் சமாதானம் செய்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அதை வளர்த்துக்கொண்டால் பின்னாளில் கனவுகளை எளிதில் அடைய முடியும். இளமையில் கற்பது நல்லது - சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வரும் திருப்தியை விட மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் பின்னாளில் அது பயன்படும்.


சமீபத்திய செய்தி