உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

சென்னை: 'தமிழ் திரைப்பட இயக்குனர், என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்' என, நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ix8ublur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், 'நீலகுறுக்கன், அத்வைதம்' போன்ற மலையாள படங்களில் நடித்த ஒரு நடிகை தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த பின் சினிமாவை விட்டே விலகி விட்டார்.இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் அவர் அளித்துள்ள பேட்டி: எனக்கு அப்போது, 18 வயது. தமிழ் இயக்குனர் ஒருவர், அவரது மனைவியுடன் வந்து, என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார். படத்தில் நடிக்கும் போது, அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஒரு நாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், என்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். பின், அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு, 30 ஆண்டுகள் ஆனது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆனால், அந்த இயக்குனர் யார் என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை. போலீசாரின் விசாரணையில், அவர் பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேட்டி மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வெளியே சொல்ல வேண்டாம்'

மலையாள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது என, இங்குள்ள நடிகையரும் பேச தொடங்கி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, 2019ல் விசாகா கமிட்டி பரிந்துரைப்படி, நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது.இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானங்கள்

1. உரிய ஆதாரங்களுடன் பாலியல் குற்றச்சாட்டு வந்து, உண்மை இருக்கும் பட்டசத்தில், சம்பந்தப்பட்டவர்கள் திரைத்துறையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற தடை விதிக்கும்படி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்படும்2. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும்நபர்கள் மீது, முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.3. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, ஏற்கனவே தனி தொலைபேசி எண் உள்ள நிலையில், தற்போது இ -மெயில் வாயிலாகவும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது4. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி வாயிலாக தங்கள் புகார்களை அளிக்கலாம். நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம்5. யு -டியூபில் திரை துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதுாறாக பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால், கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்புஅளிக்கும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Suresh Velan
செப் 07, 2024 14:24

இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்


kumar
செப் 07, 2024 10:00

பாலியல் குற்றம் செய்தவர் என்று தீர்ப்பளிப்பாணாவர் நிரந்தரமாக திரை உலகை விட்டு விலக்க படுவார் என்று முடிவெடுக்க தைரியம் இல்லாத கோழை கமிட்டியின் கேவலமான தீர்மானம் ஐந்து ஆண்டுகள் மட்டும் விலக்கு என்று . இதற்க்கு ஒரு மானம் கெட்ட கமிட்டி . ஆதாரத்துடன் எப்படி குற்றம் சாட்ட முடியும் ? சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் , குற்றம் சாட்டப்பட்டவரின் நடை முறை , முந்தைய நடத்தைகள் வைத்து தான் சொல்ல முடியும். ஆதாரங்களை கொண்டு வந்தால் தான் நடவடிக்கை என்பது ஆணாதிக்க திரை உலகில் இப்போது திரியும் பல பாலியல் குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கும் ஒருமாற்று திறனாளியோ , வயதானவரோ , குறிப்பிட்ட மத இனத்தை சார்ந்தவரோ வேலை செய்யும் விதத்தில் பாதிக்க பட்டால் இத்தனை நிபந்தனைகள் போடுகிறதா சமுதாயமும், அரசும், உடன் வேலை செய்பவரும் . பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிவான கையறு நிலை? எப்பொழுது எந்த பெண்ணும் எந்த வேலயிலும் தொந்தரவின்றி , சுதந்திரமாக பணியாற்ற முடிகிறதோ அன்று தான் உண்மையான சமூக நீதி கிடைக்கப்பட்டதாக பெருமை அடையலாம் . அதை விட்டு " அவள் ஏன் இந்த வேலைக்கு போனாள்?" "ஏன பணத்துக்காக நடிக்க வந்தாள் ? " என்றெல்லாம் கேட்பது நம் கயமையை வெளிப்படுத்துவதாகும் .


Mani . V
செப் 07, 2024 07:40

வாய்ப்பு வரும் வரையிலும் அனைத்திற்கும் இணங்கிச் செல்ல வேண்டியது பின்னர் குய்யோ முறையோ என்று கூவ வேண்டியது. 18 வயது ஒன்றும் பால் குடிக்கும் வயதில்லையே? அப்பொழுதே சொல்லி இருக்கலாமே? இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?


Mr Krish Tamilnadu
செப் 06, 2024 14:50

படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கான பிரத்தியேக, அவசியமான வசதிகள் பற்றியும் தீர்மானம் போட்டு இருக்கலாம். பாலியல் தீண்டல்கள், வற்புறுத்தல்கள் இவைகளுக்கு உங்கள் நடவடிக்கைகள் ஒ.கே. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பாலியல் அத்துமீறல்கள் சட்ட நடவடிக்கைளுக்கு போய் தானே ஆக வேண்டும். அத்தகைய பிரச்சனைகளில தொழில் ரீதியாக, பாதுகாப்பு உறுதி படுத்துதலுக்காக விதி மீறியவர்கள் மீது நீங்களும் தடை விதிக்கலாம்.


seshadri
செப் 06, 2024 12:14

எனக்கு தெரிந்து அது டைரக்டர் கே பாலசந்தர்.


Lion Drsekar
செப் 06, 2024 11:22

முன்பெல்லாம் எங்கேயாவது ஏதாவது ஒரு தவறு நடந்தால் முன்னோர்கள் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது மன்னன் எவ்வழியோ அவ்வழியில் மக்களும் என்று, நல்ல வேலை இப்போது மன்னர்கள் இல்லை, வந்தே மாதரம்


kannan
செப் 06, 2024 11:11

வேலன் ஐயங்கார் அல்லது முருகன் அய்யங்கார்?


Ramesh Sargam
செப் 06, 2024 11:00

பணத்துக்காக ஆசை வலையில் சிக்குண்டு, பிறகு சினிமா சான்ஸ் போனபிறகு புத்தி வந்து இப்பொழுது குற்றம் சாட்டி என்ன பயன்? போன கற்பு திரும்ப கிடைக்குமா?


M Ramachandran
செப் 06, 2024 10:42

தேன் எடுக்கும் போது கையில் ஒழுகும் தேனை நக்காமல் எப்படி இருப்பார்கள்?


sridhar
செப் 06, 2024 11:55

அது தேன் இல்லை , விஷமுள்ள methane


Shekar
செப் 06, 2024 10:00

முன்பு எண்பதுகளில் இதே குற்றச்சாட்டு ஒரு இயக்குனர் மேல் உண்டு. பெரும்பாலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்துவார், ஆண் நடிகர்கள் அறிமுகமாக காசு வாங்கிக்கொள்வார், பெண்களை அறிமுகம் செய்ய ....யூகித்துக்கொள்ளுங்கள்.


புதிய வீடியோ