உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமவள நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி மாமூல்: கேரள முதல்வர் பினராயி மகளிடம் விசாரணை

கனிமவள நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி மாமூல்: கேரள முதல்வர் பினராயி மகளிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனிமவள நிறுவனத்திடம், 'மாதப்படி' என, 1.72 கோடி ரூபாய் மாமூல் பெற்றது தொடர்பாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிஜயனை சென்னைக்கு வரவழைத்து, தீவிர மோசடிகள் விசாரணை அலுவலக அதிகாரி கள் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.கேரள மாநிலத்தில், சசிதரன் கர்த்தா என்பவர், சி.எம்.ஆர்.எல்., எனப்படும், 'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டெயில் லிமிடெட்' என்ற, கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மாதப்படி

அவரது நிறுவனத்தில், 2019 ஜனவரி 25ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், 'மாதப்படி' என குறிப்பிட்டு, போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு மாமூல் கொடுத்த விபரம் எழுதப்பட்டு இருந்தது.மேலும், அந்த மாதப்படி பிரிவில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வந்த, 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, 1.72 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த பணப் பரிவர்த்தனை மீது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனால், அமலாக்கத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள், அந்த ரகசிய டைரியை வாங்கி, அதன் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தம் இல்லை

அப்போது, சசிதரன் கர்த்தா நிறுவனத்திற்கு மென்பொருள் மேம்படுத்தித் தர, வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன. இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தொழில் ரீதியாக வீணா விஜயன் நிறுவனத்திற்கும், சசிதரன் கர்த்தா நிறுவனத்திற்கும் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. அந்த நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் வாங்கப்படவும் இல்லை.கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருக்க, வீணா விஜயன் நிறுவனத்திற்கு, 1.72 கோடி ரூபாய் மாமூலாக தரப்பட்டு இருப்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதையடுத்து, வீணா விஜயன் மீது, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், இந்த மாமூல் விவகாரத்தை, மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எஸ்.எப்.ஐ.ஓ., எனப்படும், தீவிர மோசடிகள் விசாரணை அலுவலகமும் கையில் எடுத்தது. அதற்கு, வீணா விஜயன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என, பினராயி விஜயனும் குற்றம் சாட்டினார். தன் மனைவியின் ஓய்வூதிய நிதியில் இருந்து, மகள் தனியாக நிறுவனம் துவக்கி நடத்தி வந்ததாகவும் கூறினார்.

வழக்கு தள்ளுபடி

தற்போது அந்த நிறுவனம் செயல்படாத நிலையில் உள்ளது. எஸ்.எப்.ஐ.ஓ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீணா விஜயன், கர்நாடக மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; இந்த வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து, எஸ்.எப்.ஐ.ஓ., அதிகாரிகள், வீணா விஜயன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, 'சம்மன்' அனுப்பினர்.அதை ஏற்று, சில தினங்களுக்கு முன், சென்னை ராஜாஜி சாலையில் செயல்படும், எஸ்.எப்.ஐ.ஓ., அலுவலகத்தில், வீணா விஜயன் ஆஜராகி உள்ளார். அவரிடம், சசிதரன் கர்த்தா நிறுவனத்திலிருந்து, வீணா விஜயன் நிறுவனத்திற்கு, 2017 - 2018ம் ஆண்டில், வங்கி வாயிலாக, 1.72 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களை காட்டி விசாரித்துள்ளனர். இதனால், வீணா விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
அக் 14, 2024 13:17

அங்கும் வாரிசு அரசியல், விசாரணை , அருமை, அடுத்த முதல்வர் தயார் , பாராட்டுக்கள், வழக்கு ஒருபுறம் நடக்கும், தேர்தல் மறுபுறம் நடக்கும், நீங்கள் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வராக வருவதற்கு காலம் அருமையாக. கனிந்துவிட்டது எப்போது மாமூல் , கோடிகளில் விசாரணை என்று வந்துவிட்டதோ அப்போதே இவருக்கு வெற்றி உறுதி, வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்


sankaranarayanan
அக் 14, 2024 10:43

மாதப்படி என, 1.72 கோடி ரூபாய் மாமூல் பெற்றது தொடர்பாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிஜயனை சென்னை கொண்டுவந்து விசாரித்து உள்ளெ தள்ள வேண்டும் இப்படித்தான் மாஜி தெலிங்கானா முதல்வரின் மகள் கவிதா மதுபான கொள்கையில் மாட்டிக்கொண்டு இன்னமும் சிறையில் இருக்கிறரார் அப்பாவிற்கு ஆட்சி போயிடுச்சு அதேபோன்று விஜயன் ஆட்சியும் சிக்கிரமே போயிடும் வீணா விஜயன் சிறை செல்வது உறுதி


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 08:51

அப்படியே கட்டுமரக் குடும்பத்தின் ஸ்டைல் ..... கலீஞர் டீவி ஞாபகத்துல வருது .....


raja
அக் 14, 2024 08:04

அடேங்கப்பா... நம்ப துக்லக் கோமாளி, சின்னவன் மற்றும் அக்காகணி கும்பலை காட்டிலும் பெரிய அப்பா டக்கெரா இருக்கும் போல இது...


VENKATASUBRAMANIAN
அக் 14, 2024 08:02

இதுதான் இன்றைய கம்யூனிஸ்டுகளின் லட்சணம். அருணன் கனகராஜ் லெனின் போன்றவர்கள் மோடியை பற்றி வாய் கிழிய கத்து வார்கள். ஆனால் இதற்கு வாயை திறக்க மாட்டார்கள்.


lana
அக் 14, 2024 06:04

தமிழக கம்மி களுக்கு மொத்தம் ஆக 25 கோடி கொடுக்க ஆள் இருக்கிறது. கேரளாவில் அப்படி இல்லை. எனவே இந்த மாதிரி பலரிடம் உண்டியல் குலுக்கி சம்பாரிக்க வேண்டும். தங்கம் கடத்தி வந்தாலும் பிடிக்கிறது . கம்மி கள் எப்படி தான் பணம் சம்பாதிப்பது. சாம்சங் நிறுவனம் போல யாரையும் மிரட்ட முடியாது. ஏனெனில் கேரளாவில் ஆலைகள் இல்லை.


Kasimani Baskaran
அக் 14, 2024 05:40

என்ன இது தமிழக கேடிகள் மாவட்ட அளவில் காலை உணவுக்கு செலவு செய்யும் தொகையை ஒரு முதல்வரின் மகள் அடித்திருக்கிறார் என்றால் அது ஒரு தேசிய அவமானம். பாராட்டு தெரிவிப்பதை விட்டுவிட்டு இப்படியா தொல்லை கொடுப்பது.


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 03:00

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளைப்பன்றிகளை வீட்டில் வளர்ப்பார்கள் , அதனை அப்படியே இப்போ நினைவு கூறவைத்துளார் விஜயனின் மகள்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 08:53

மூர்க்க மாப்பிள்ளைக்காக விஜயன் வளர்த்திருக்காரு ன்னு சொல்ல வர்றீங்களா ????


Azar Mufeen
அக் 14, 2024 17:46

நம்ம கங்கனாவை பார்த்தாலும் இந்த நினைப்பு வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை