உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள மலைப்பூண்டு 10 மடங்கு விலை சரிவு

கேரள மலைப்பூண்டு 10 மடங்கு விலை சரிவு

உடுமலை; கேரள மாநிலத்தில், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு விலை சரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கேரள மாநிலம், மறையூர், காந்தலுார், பெருமலை, குகநாதபுரம், கீழாந்துார் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கரில் மலைப்பூண்டு சாகுபடி நடக்கிறது. மலைப்பகுதிகளில் விளையும் இந்த நாட்டு ரக பூண்டு, மருத்துவ குணம், காரம், மணம் என, பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதனால், 'வட்டவடா காந்தலுார் மலைப்பூண்டு' என, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பூண்டு, மதுரை வடுகபட்டி, மேட்டுப்பாளையம் பூண்டு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும். தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், வரத்து அதிகரிப்பால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு கிலோ, 600 ரூபாய் வரை விற்ற பூண்டு, தற்போது 60 ரூபாய் மட்டுமே விற்கிறது. கடந்தாண்டு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்தனர். மற்ற மாநில பூண்டுகள் வரத்து காரணமாக, தமிழக பூண்டுகளுக்கு விலை கிடைக்கவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ