உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது: 175 லிட்டர் பறிமுதல்

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது: 175 லிட்டர் பறிமுதல்

மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே வட்டப்பாறையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை கைது செய்த கலால்துறையினர் 175 லிட்டரை பறிமுதல் செய்தனர். கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதால் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கலால்துறையினர் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் உடும்பன்சோலை அருகே வட்டப்பாறை வனத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. அடிமாலி போதைப்பொருள் தடுப்பு துறை உதவி இன்ஸ்பெக்டர் திலீப் தலைமையில் அதிகாரிகள் வட்டப்பாறை வனப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த அருண் 28, சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 175 லிட்டர் சாராயம், உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஆக 19, 2024 16:08

இவர் மாதிரி ஆட்களால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விட்டது என்று கைது செய்யப்பட்டார் போலீஸினால்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை