புவிசார் குறியீடு பெற்ற ஆடைகள் விற்பனை தீபாவளிக்கு காதி கதர் அங்காடி அசத்தல்
தீபாவளியையொட்டி, புவிசார் குறியீடு பெற்ற காதி பருத்தி புடவைகள் மற்றும் புதிய வண்ண பட்டுப்புடவைகள், அச்சிடப்பட்டபட்டுரக புடவைகள் என, புது ரகங்கள், காதி விற்பனைஅங்காடிகளில் விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, காதி கதர் துறை அதிகாரிகள் கூறியதாவது:காதி கதர் ஆடைகளுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுதும் 39 கதர் அங்காடி விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில், கதர் பருத்தி, கதர் பாலியஸ்டர், கதர் சில்க் ஆடைகள் விற்கப்படுகின்றன. தீபாவளிக்கு'புவிசார் குறியீடு' பெற்ற புடவைகள், பட்டுப்புடவைகள், அச்சிடப்பட்ட பட்டு மற்றும் பருத்தி ரக புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் 'புவிசார் குறியீடு' பெற்ற தின்பண்டங்கள், தேக்கு மரத்தில் உருவாக்கப்பட்ட ஆபரணப் பெட்டிகள், பொம்மைகள் போன்றவை புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. பட்டு வகைகளில், சேலைகள், வேஷ்டி, துண்டு போன்றவை உள்ளன. முகூர்த்த பட்டு சேலைகள் 40,000 முதல் 80,000 ரூபாய் வரை உள்ளன. இச்சேலைகள், 50 சதவீதம் பட்டு, 50 சதவீதம் வெள்ளி ஜரிகையால் உருவாக்கப்பட்டுள்ளன.'அச்சிடப்பட்ட பட்டு ரக சேலைகள்' 7,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. பட்டு வேஷ்டிகள், 5,000 முதல் 8,000 ரூபாய்க்கும், பட்டு ரக துண்டுகள் 700 முதல் 1500 ரூபாய்க்கும், பட்டு ரக சால்வைகள் 11,000 முதல் 13,000 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளன. இந்த சால்வைகள், 40 சதவீதம் பட்டு நுால் மற்றும்60 சதவீதம் வெள்ளி ஜரிகையால் நெய்யப்பட்டவை.பட்டு நுாலை விட வெள்ளி ஜரிகை அதிகமாக இருப்பதால், கூடுதல் விலை. கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடிவழங்கப்படுகிறது. சுங்குடி சேலைகள்'புவிசார் குறியீடு' பெற்ற 'சுங்குடி பருத்தி சேலைகள்' விற்பனைக்கு வந்துள்ளன. சுங்குடி ஜரிகை சேலைகள், 1020 ரூபாய்; வண்ணமய வடிவமைப்பு சேலைகள், 1,780; சுங்குடி கோபுர சேலைகள், 1,710 ரூபாய். 'நெகமம் பருத்தி சேலைகள் 880 ரூபாய். 'அச்சிடப்பட்ட இலகுரக பருத்தி சேலைகள்,'1,630 முதல் 1,980 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. ஆண்களுக்கான, அச்சிடப்பட்ட கதர் பருத்தி ரக சட்டைகள், 469 முதல் 521 ரூபாய் வரை உள்ளன. பருத்தி துண்டு, வேஷ்டி, போர்வை, தலையணை, படுக்கை மெத்தை வகைகளும் விற்பனைக்கு உள்ளன. கடந்த ஆண்டு, 15.68 கோடி ரூபாய்க்கு, காதி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு 40 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, கதர் ஆடை விற்பனையை அதிகரிக்க, மாவட்ட அரசு அலுவலக வளாகங்கள், அரசு கல்லுாரிகள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் போன்றவற்றில், தற்காலிக கதர் ஆடை விற்பனை அங்காடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.