உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னிகள் ஜாக்கிரதை: சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எம்ஏக்கள்!

கிட்னிகள் ஜாக்கிரதை: சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எம்ஏக்கள்!

சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று (அக் 16)அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தமிழக சட்டசபை கூட்டம் அக் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 3வது நாளான இன்று (அக் 16) சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்று எழுதி இருந்த பேட்ச் அணிந்து வந்திருந்தனர். கிட்னி மோசடியில் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசை கண்டிப்பதாக கூறி, இந்த பேட்ஜ் அணிந்து இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

கிட்னி திருட்டு: மா.சு விளக்கம்

கிட்னி திருட்டு புகார் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சிறுநீரக அறுவை சிகிச்சை முறைகேடாக நடந்துள்ளது என எழுந்த பிரச்னை குறித்து, விரிவான பதிலை அவையில் தெரி விக்கிறேன். 19.7.2025 அன்று செய்திகளில் சிறுநீரக முறைகேடு நடந்ததாக வந்துள்ள புகார் குறித்து, முதல்வர் ஸ்டாலின் பார்த்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டது. இடைத்தரகர்கள் ஸ்டாலின் மோகன், ஆனந்த் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.பெரம்பலூர் தனியார் மருத்துமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எந்த மருத்துவமனையாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை மறுசீரமைத்துள்ளோம். இந்த புகாரில் அரசு அதிகாரிகள் 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.கூட்டத்தொடரின் 2ம் நாளான நேற்று (அக் 15) கரூர் உயிர்பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்னி திருட்டு சம்பவம் பின்னணி?

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு பற்றி விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை ஐகோர்ட் மதுரைக்கிளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

vee srikanth
அக் 16, 2025 18:18

இடைத்தரகர்கள் ஸ்டாலின் மோகன், ஆனந்த் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது "தரகர் பெயர் பாருங்கள் ""


vee srikanth
அக் 16, 2025 18:17

அ தி மு க - தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பந்தமாக கூட பட்டை அணியலாம்


M Ramachandran
அக் 16, 2025 15:59

வறுமைய்ய என்பது கட்சி காரர்களுக்கு மட்டும் தான். எங்க குடும்பம் மிக பெரிய குடும்பம் வறுமையில் வாடி கொண்டிருந்தது. இப்போது அப்ப்டி இல்லை. அது இப்போது பெரும்பாலும் நிவர்த்தி ஆகி விட்டது. பிருகு 200 ஊபீஸ் வரைய்ய கவனிக்க வேண்டும். அது முடிந்து விடும். இப்போது அடுத்த கட்சியிலிருந்து ஏராளமாய் வறுமை நீங்க வருபவரின் வறுமையை போக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.அதுவும் சீக்கிரம் 2026 வருட தேர்தலுக்கு பின்னே நீக்கி விடுவோம். அதனால்தான் தமிழ்நாடு முன் உதாரணமாக திகழ்கிறது என்று கூறுகிறோம்.அதனால்தான் திகழ் என்று கூறுகிறோம்


M Ramachandran
அக் 16, 2025 15:47

இது ஸ்டாலினுக்கு வெறுப்பூட்டும் செயல். கோடா நாடு கேசு பைல் தூஸு தட்டப்படும்


Easu
அக் 16, 2025 12:39

சரி முறையான பணம் ஏன் கொடுக்கவில்லை


Nagarajan D
அக் 16, 2025 12:32

போகிற போக்கை பார்த்தால் பொதுமக்கள் தான் தமிழகமே ஜாக்கிரதை என்று பேட்ஜ் அணிந்து சுற்ற வேண்டும்...


ஆரூர் ரங்
அக் 16, 2025 11:45

விசாரணை தேவை....


திகழ்ஓவியன்
அக் 16, 2025 11:33

இங்கு கிட்னி திருட்டு இல்லை, வறுமைக்கு கிட்டினியை விற்று உள்ளார்கள் அது ஏதோ ஒருத்தர் உயிர் காக்க உதவி உள்ளது


கலைஞர்
அக் 16, 2025 11:51

நல்லா முட்டுக் கொடுக்கறாங்க


Kjp
அக் 16, 2025 12:02

பூசி மொழுக வேண்டாம்.


சசிக்குமார் திருப்பூர்
அக் 16, 2025 12:27

மக்கள் பிரதிநிதிகள் மக்களை வறுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.


Nagarajan D
அக் 16, 2025 12:35

1967 முதல் இந்த திராவிடத்தானுங்க தான ஆட்சியிலிருந்தானுங்க இன்னும் ஏன் வறுமை உள்ளது... வேலை வாய்ப்புக்கு வழி செய்யாமல் இந்த விளங்காத உண்டியல் ..... கூட்டத்தோட சேர்ந்த கல்லாக்கட்டி ஒவ்வொரு தொழில் நிர்வாகத்தையும் மூடிட்டு இருந்தா மாநிலம் எப்படி உருப்படும்...