உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளத்தூர் பயணம் புது வலிமையை தந்தது: முதல்வர் ஸ்டாலின்

கொளத்தூர் பயணம் புது வலிமையை தந்தது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!இன்றைய கொளத்தூர் பயணத்தில், கிளாம்பாக்கம் கருணாநிதி நூற்றாண்டு பஸ் முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷன்,பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,கொளத்தூரில் புதிய காவல் துணை கமிஷனர் அலுவலகம், பெரவள்ளூர் போலீஸ் ஸ்டேஷன், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், ரெட்டேரியில் AC பஸ் நிறுத்தம் என, ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kjp
ஆக 05, 2025 17:49

எழுதினவன் ஏட்ட கெடுத்தான் படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. இப்போ உங்களுக்கு வலிமையை கொடுக்கும் ஐயா. 2026 தேர்தலில் கடுமையான வலியை கொடுக்கும்.


Jack
ஆக 05, 2025 17:41

அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்து வரிக்குறைப்பு பற்றி பேசவேண்டும் ..நியூ யார்க்கில் கலைஞர் சிலை ஒன்றும் நிறுவி உலகத்துக்கே திராவிட மாடலின் பெருமையை பறைசாற்றலாமே ...


theruvasagan
ஆக 05, 2025 17:39

இதேயேதான்யா அமெரிக்கா போனபோதும் சொன்னார். அப்ப அமெரிக்கா கொளத்தூர்ல இருக்கணும். இல்லாட்டி கொளத்தூர் அமெரிக்காவுல இருக்கணும்.


என்றும் இந்தியன்
ஆக 05, 2025 17:37

கொளத்தூர் பயணம் புது வலிமையை தந்தது: முதல்வர் ஸ்டாலின். அதாவது இந்த திட்டத்தின் மூலமாக 50% கமிஷன் அடிப்படையில் ரூ 43 கோடி x 50% = ரூ 21.5 கோடி கிடைத்ததால் புது வலிமையை தந்தது என்று சொன்னார்


பாரத புதல்வன்
ஆக 05, 2025 16:50

எமதர்மனின் ஆசி கிட்டும்


S.V.Srinivasan
ஆக 05, 2025 16:48

கொளத்தூர் என்ன அமெரிக்காவுலயா இருக்கு. என்னவோ கொளத்தூர் போயிட்டு வந்ததா அமெரிக்கா போயிட்டு வந்த மாதிரி பெருமையா சொல்றாரு. ஐயோ, ஐயோ.


panneer selvam
ஆக 05, 2025 16:36

Stalin ji , where you go , you use the similar dialogue like your father . If you are in Delta Region, you will claim as agriculturist , if you are in Coimbatore belt , you love to be a worker , If you are in South Madurai region, you will adore Tamil , If you are in Deep South, Kanyakumari , you will claim , that you love Christianity . So drama dialogue continues depends on the region .


Jack
ஆக 05, 2025 17:44

Luckily not visiting Merina Beach ..........


sankaranarayanan
ஆக 05, 2025 16:35

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்தபின் இப்போ அங்கே குளத்தூர் கும்மாளமா போடு சக்கை இனி அங்கே நடனம் நாட்டியம் இயல் இசை குடி கும்மாளம் எல்லாமே உண்டு


Narayanan
ஆக 05, 2025 15:57

தமிழக மக்களுக்கும் புது வலிமை வந்து விட்டது உங்களை நம்பி இனி பயனில்லை என்று . உலக மகா நடிப்புதான் போங்கள் .


Amsi Ramesh
ஆக 05, 2025 15:27

தேர்தல் வருதுல்ல இனிமையாகத்தான் இருக்கும்


சமீபத்திய செய்தி