உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் கவனம் பெற்ற கூமாப்பட்டி... ரூ.10 கோடிக்கு விளக்கம் சொன்னது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்!

அரசின் கவனம் பெற்ற கூமாப்பட்டி... ரூ.10 கோடிக்கு விளக்கம் சொன்னது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருக்கும் கூமாப்பட்டியின் பிளவுக்கல் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தற்போது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டாகி வருகிறது. அந்த கிராமத்தைச் இளைஞர் ஒருவர், அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலாக துவங்கியது.இதனை பார்த்த சிலர் அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இன்னும் பலர், கூமாபட்டி குறித்து வீடியோ வெளியிட துவங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4navrfri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகில் தான் பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணைகள் உள்ளன. தற்போது இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. கூமாப்பட்டி டிரெண்டாக தொடங்கியுள்ள நிலையில், இந்த அணைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், பிளவுக்கல் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.வைரல் வீடியோவில் பேசிய இளைஞர், சில ஆண்டுக்கு முன் கூமாபட்டியில் 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடக்கும் என்று அறிவித்ததாகவும், ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venkataraman vs
ஜூன் 28, 2025 20:14

விருது நகர் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகவும், முழுவதும் விவசாயம் சார்ந்து இருக்கும் கூமாப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலா தலமாக்கி நாசம் செய்து விடாதீர்கள்.


chinnamanibalan
ஜூன் 27, 2025 20:09

அரசு அதிகாரிகள், பூசி மொழுகும் வேலையை செய்யாமல் கூமாப்பட்டி மக்களின் குரலுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Bhaskaran
ஜூன் 27, 2025 19:32

அதிகாரிகள் புளுகுவதே முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர்


தாமரை மலர்கிறது
ஜூன் 27, 2025 18:59

கூமாபட்டியில் பூங்கா அமைத்து, சுற்றுலா தளமாக தமிழக அரசு மாற்ற வேண்டும். அங்கு வரும் பயணிகளுக்கு தலா நூறு ரூபாய் மத்திய அரசு இயற்கை சுற்றுலா கட்டணம் விதிக்க வேண்டும்.


Padmasridharan
ஜூன் 27, 2025 13:36

பூங்காக்கள் முக்கியமா, விவயசாய சாப்பாடு முக்கியமா சாமி. .


SUBRAMANIAN P
ஜூன் 27, 2025 13:26

கூமாபட்டிய கெடுத்து நாசம் பண்ணிடுங்க.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 13:24

மேம்பாட்டு பணிகள் தொடங்குமோ, தொடங்காதோ தெரியாது. ஆனால் முதலில் அந்த ஊர் பெயரை கூமாபட்டி என்பதை மாற்றி கருணாநிதி தொட்டி என்று மாற்றுவார்கள் திமுகவினர்.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 12:54

மேம்பாட்டு பணிகள் தொடங்குமோ, தொடங்காதோ தெரியாது. ஆனால் முதலில் அங்கே கருணாநிதிக்கு ஒரு 700 கிலோ வெங்கலத்தில் சிலை வைத்துவிடுவார்கள் திமுக அரசு அமைச்சர்கள். கேடுகெட்ட ஜென்மங்கள்.


Thravisham
ஜூன் 27, 2025 11:28

கூமாபட்டி இளைஞர் சொன்னது சரிதான். கலெக்டர் முகத்துல கரி. த்ரவிஷன்களுக்கு கமிஷன் கிடைக்கலீயோ?


ديفيد رافائيل
ஜூன் 27, 2025 10:48

ஊர் பெயர் வித்தியாசமாக இருக்கு அதனால் மக்களிடம் பிரபலமாயிருக்கு.


முக்கிய வீடியோ