உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; கூடலூர் கலால் மதுவிலக்கு பிரிவு தாசில்தாராக இருப்பவர் சித்தராஜ்(54). இவர், கூடலூர் மண்வயல் கோழிகண்டி பகுதியில் நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகள் வாங்க அடிக்கடி சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக அவர் சென்றுள்ளார். அங்கிருந்த 42 வயது பெண், தற்போது முட்டை இல்லை என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.பெண்ணின், சத்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பாக, கூடலூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சித்தராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
மார் 31, 2025 07:48

இதுக்கு போய் அல்டிக்காத


Kanns
மார் 31, 2025 07:20

Clear Cut False Case by Case Hungry Criminals. How Come Hand Grabbing Due to Altercations in Public Place be Sexual Harassment??? Maxm Molestation If Exceeded.


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 05:59

கோட்டாவில் ஜொலிக்கும் திராவிடமணி.


DARMHAR/ D.M.Reddy
மார் 31, 2025 02:37

இந்த கயவனை போது மக்கள் பிடித்துதலையைமொட்டையடித்து ஆடையைகளைந்து கோவணத்துடன் கழுதை மேல் ஏற்றி முகத்தில் செம்புள்ளி கரும்புள்ளி வெண் புள்ளி வர்ணம் பூசி பழைய பிய்ந்த செருப்புகளை கோர்த்த மாலையை அணிவித்து ஊர் மக்கள் " பராக் ,பராக் மக்களே பாருங்கள் வழிவிடுங்கள் வரார் வரார் பாருங்கள் நம்ம தாசில்தார் " என்று சொல்லி ஊர் வலம் வரச் செய்தாலும் இப்படிப்பட்ட ஜென்மம் திருந்துமோ என்பது சந்தேகம் தான்


A P
மார் 30, 2025 23:27

"ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிர்ஷ்டம் இருக்கு கழுத்தை மேய்க்க" என்று சொல்வார்கள். ஆனால் தாசில் பண்ணுகிற இந்த ஆளுக்கு, ஆசையைப்பாரு.


vadivelu
மார் 30, 2025 22:44

அதென்ன எல்லா அயோக்கியங்களுக்கும் இப்ப அதிக துணிவு வந்து இருக்கு.


Svs Yaadum oore
மார் 30, 2025 22:12

கலால் மதுவிலக்கு பிரிவு தாசில்தாராக இருப்பவராம் ......இவரைப்போன்றவர் தாசில்தாராக இருப்பதால்தான் விடியல் ஆட்சியில் ஊரெங்கும் கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடுது ... பள்ளி ஆசிரியங்க எல்லாம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ....அதிகாரிங்க ஊர் பெண்களுக்கு தொல்லை ...கருமம் ...படு கேவலமான ஆட்சி நடக்குது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை