உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!

குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “ஐயா தான் நம்முடைய குலசாமி, குல தெய்வம். ஐயா உடைய கொள்கை வழிகாட்டி” என பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. 2ம் நாளாக, பா.ம.க., நிர்வாகிகள் சந்திப்பில் அன்புமணி பேசியதாவது: ஐயா தான் நம்முடைய குலசாமி, குல தெய்வம். ஐயா உடைய கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை ஐயா அவர்கள் தொடங்கி இருக்கிறார். 45 ஆண்டுகால உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை. கொள்கைகள்ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், கல்வி,சுகாதாரம், மருத்துவம், வேளாண் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எல்லாம் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தது. அவரது கொள்கை தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஐயாவின் கொள்கையை நாம் கடைப்பிடிப்போம். கடைப்பிடித்து நாம் முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

1.5 லட்சம் உறுப்பினர்கள்!

தமிழகத்தில் இவ்வளவு காலமாக யார் யாரோ ஆண்டார்கள். இனி நம்முடைய காலம். நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் நிறைய பார்த்து விட்டேன். ஒரு தொகுதியில் 1.5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொகுதியில் தேர்தலில் வாக்கு வாங்கியது 65 ஆயிரம் தான். ஆனால் 1.5 லட்சம் உறுப்பினர்கள். புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீஹாருக்கு அழைப்பு போகிறது. தங்க சங்கிலி தரமாட்டேன்!அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் தங்க மோதிரமோ, தங்கச் சங்கிலியோ தர மாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். கடந்த காலங்களில் நிறைய அனுபவித்துவிட்டேன். உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன். எனக்கு குறைவாக இருந்தாலும் உண்மையான உறுப்பினர்கள் வேண்டும். தைரியமாக இருங்கள்கட்சியில் உள்ள சின்னச்சின்ன குழப்பங்களை சரிசெய்து விடுவேன்; வெளியே சொல்ல முடியாத மன வேதனை என் மனதிலும் உள்ளது. தைரியமாக இருங்கள் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க விரைவில் நடைபயணம் செல்ல உள்ளேன்.இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

panneer selvam
மே 31, 2025 22:06

Anbumani ji , You can not break away from your e circle .You are chained with your e politics so others are not going to trust any of your generic words.


சேகர்
மே 31, 2025 22:05

மனிதரை தெய்வமாக்க முடிவா?


Anantharaman Srinivasan
மே 31, 2025 19:01

நாடகம் நடிப்பு நப்பாசை ..45 ஆண்டுகளாக அரசியலில் நீந்தி வெற்றிபெற முடியாமல் குட்டையில் நீந்தி காட்டினார் தந்தை. மகன் நடைபயணம். இதற்கு முன் நடைபயணம் சென்றவர்கள் பலர் இன்னும் மீளவேயில்லை.


madhesh varan
மே 31, 2025 18:49

நீங்க வாரிசு அரசியல் பண்ணலாம், உங்க மனைவிக்கு சீட்டு குடுக்கலாம் , அப்புறம் உங்க பிள்ளைக்கு சீட்டு குடுக்கலாம் , ஆனால் வெளியில் வந்து திமுக வை வாரிசு கட்சினு திட்டவேண்டியது, கொஞ்சமாவது மூளையை பயன்படுத்துங்க, பெத்த அம்மாவை அடிக்கப்போவது நல்லதா ?


என்றும் இந்தியன்
மே 31, 2025 18:10

ராம சாமி என்றால் குலசாமி குலதெய்வம் என்றிருப்பார் தனது தந்தையைப்பற்றி அல்லவே அல்ல


Louis Mohan
மே 31, 2025 17:36

100 சத சாதி கட்சி . ஆட்சிக்கு வர துடிக்குது. எவ்வளவு நாள் ஆனாலும் ஆட்சிக்கு வர இயலாது.


முருகன்
மே 31, 2025 16:21

உங்கள் இருவரது நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும்


குலகுமார்
மே 31, 2025 15:32

குலசாமி அன்புமணியை அமைச்சராக்கி தப்பு பண்ணிருச்சு


Samy Chinnathambi
மே 31, 2025 14:57

என்னையா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க அங்க திருட்டு குடும்பம் தமிழகத்தையே சூறையாடுது.. ஒற்றுமையா இருந்து அந்த குடும்பத்தை விரட்ட வேண்டிய நீங்க குடும்ப சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க ஒருவேளை அந்த குடும்பத்துக்கிட்ட நீங்களும் காசு வாங்கிட்டிங்களா?


மீனவ நண்பன்
மே 31, 2025 17:04

அனுசரிச்சு போகவேண்டியது தானே


சமீபத்திய செய்தி