மேலும் செய்திகள்
12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
24-Sep-2026
சத்தியமங்கலம்: ஆசனுாரில், சிறுத்தை தாக்கியதில் கூலி தொழிலாளி பெரியசாமி, 36, பலியானார். ஈரோடு மாவட்டம், ஆசனுார் மலை கிராமம், பங்களா தொட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர், ஆசனுார் – மைசூரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது, அவரை தாக்கி இழுத்து சென்ற சிறுத்தை, பாதி தின்று விட்டு, புதரில் உடலை போட்டு சென்றது. இரவு முழுதும் பெரியசாமியை காணாமல், உறவினர்கள் தேடினர். புதரில் கிடந்த பெரியசாமி உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆசனுார் வனத்துறையினர் மற்றும் போலீசாரிடம், பெரியசாமி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். அவரது குடும்பத்துக்கு, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்தி சடலத்தை மீட்ட போலீசார், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
24-Sep-2026