உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாடு தாமரைச்சேரியில் நிலச்சரிவு: வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பு

வயநாடு தாமரைச்சேரியில் நிலச்சரிவு: வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பு

பந்தலூர் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாமரைச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளிலிருந்து கோழிக்கோடு செல்வதற்கு தாமரைச்சேரி மலைப்பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட காட்சி முனை உள்ளது.இந்த பகுதியில் இன்று மாலை லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென 7:30 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இரவு நேரம் என்பதால் அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.வயநாடு மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்படுவதால் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம், கர்நாடகா, வயநாடு பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் குட்டியடி, மானந்தவாடி மற்றும் நீலகிரி நாடுகாணி, நிலம்பூர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போதும் அதே மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்டுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆர்ட்டிஸ்ட் விஜய்
ஆக 27, 2025 07:18

தொகுதிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்


எவர்கிங்
ஆக 27, 2025 02:18

கால் வைத்த நேரம் துரத்தும் சோகம்


Tamilan
ஆக 26, 2025 23:25

காஸ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை கோவாவிலிருந்து அசாம் வரை மழைக்காலத்தில் தினமும் நிலச்சரிவு ? டிரில்லியன் டாலர்கள் எங்கே போனது


Oviya vijay
ஆக 27, 2025 00:25

அடேய் dumila...95% வேலை முடிந்தது. 4000 கோடி ஏப்பம். சின்ன தூறலுக்கு சென்னை வெள்ளத்தில் மிதக்கின்றன...அதை முதலில் தேடி எடுத்து கொடு


புதிய வீடியோ