உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதுக்கு முதல்வர் விளக்கம் கொடுத்தே தீரணும்; அண்ணாமலை ஆவேசம்

இதுக்கு முதல்வர் விளக்கம் கொடுத்தே தீரணும்; அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதியாமல், போலீசார் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பியது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னையில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1gl5uxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதல்வர் ஸ்டாலின், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ethiraj
டிச 09, 2024 19:52

Every voter has right to question CM and he is being paid by voters tax money and bound to reply.


MADHAVAN
டிச 09, 2024 13:27

உன்னையெல்லாம் அவரு மதிப்பதே இல்லை, உனக்கு இன்னும் 2 மாசத்துல கட்சி பதவி போகப்போகுது, அப்புறம் வானதி இல்லாட்டி ராஜா னு யாரவது தலைமை பதவிக்கு வருவாங்க, உன்ன கொண்டுபோய் மணிப்பூர்ல போடுவாங்க,


KR
டிச 09, 2024 07:16

Athellam sellathu. Model Arasu Manipur pathi thaan kavalai padum. Thangachi INDI kuzhuvil Senthu suttru payanam sei vaargal Manipur ku. Aanal model muthalvar Vengsivayal, kallakurichi, thirunelveli ponra idangalukku sella mattar. Oru model vidiyal aaguthu


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 08, 2024 21:06

அவரு எதிர்க்கட்சி தலைவரையே மதிப்பதில்லை .நீங்க எல்லாம் லிஸ்ட்டில் இல்லவே இல்லை.


M Ramachandran
டிச 08, 2024 19:56

கல்கத்தா காளி ஆட்டம் தமிழகத்திலும் இனிதே ஆசிர்வாதத்துடன் நடக்குது என்கிறீர்களா


Barakat Ali
டிச 08, 2024 19:28

திமுக துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே பெண்ணினத்தை, பெண்ணியத்தை மதித்ததில்லை .....


nag nak
டிச 08, 2024 19:18

#கடவுளின்நேரடிதண்டனை பெற்றவர்கள் யார் யார்..! 1.மக்களுக்கான பணத்தை கொள்ளை அடிப்பவர்கள்... 2.உணவு விஷயத்தில் வயிற்றில் அடிப்பவர்கள். 3.அடுத்தவர் #போன்களை #ஹேக் செய்து முறைதவறி நடப்பவர்கள், 4. மாணவர்களின் படிப்புக்கு கேடு விளைவிப்பவர்கள்... 5. பாலியல் கொடுமைக்காரர்கள்... மற்றும் இவர்களை பாதுகாப்போர்...! 6.. கணவரது மரணத்திற்கு காரணமான மனைவியர்... இவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் முறைதவறிய நடத்தைகள்... 7. மனைவி பிரிந்து செல்லும் அளவுக்கு நடத்தை சரியில்லாத கணவர்கள்...


sankar
டிச 08, 2024 18:18

உண்மையிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - துளியும் கவலை இல்லாத ஆளும் கட்சி - கேவலமான சூழ்நிலை


Suppan
டிச 08, 2024 17:13

இதுதான் திராவிடிய மாடல்


சம்பர
டிச 08, 2024 16:34

பாரதினு ஒருத்தன் விளக்கம் குடுப்பான்


புதிய வீடியோ