ரூ.50,000 சம்பளத்தில் சட்ட ஆலோசகர் பணி
சென்னை; சி.பி.சி.ஐ.டி., அலுவலகங்களில், ஒப்பந்த அடிப்படையில், மாதம், 50,000 ரூபாய் சம்பளத்தில், சட்ட ஆலோசகராக பணிபுரிய விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, சி.பி.சி.ஐ.டி., காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் அலுவலகங்களுக்கு, சட்ட ஆலோசகர்கள் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில், இப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பு ஊதியமாக, 50,000 ரூபாய் வழங்கப்படும். பிற படிகள் எதுவும் கிடையாது. இப்பணியில் சேர விருப்பம் உள்ளோர், தமிழக காவல் துறையின், www.tnpolice.gov.inஎன்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும், 18ம் தேதிக்கு முன், 'கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறை, 220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை -600008' என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் வாயிலாக அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.