திண்டுக்கல் தலப்பாகட்டியில் இன்று லெஜண்டரி பிரியாணி டே கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுதும், திண்டுக்கல் தலப்பாகட்டியின் அனைத்து கிளைகளிலும், 'லெஜண்டரி பிரியாணி டே' இன்று கொண்டாடப்படுகிறது. சிக்கன் பிரியாணியை, 149 ரூபாய்க்கு, சலுகை விலையில் வாங்கிச் சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் நிர்வாக தலைவர் நாகசாமி தனபாலன், தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் நாகசாமி நினைவு தினத்தை, 'லெஜண்டரி பிரியாணி' தினமாக கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட 68 ஆண்டு பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டியில், பிரியாணி தயார் செய்வதை சுகாதாரமான முறையில் செய்வதுடன், தற்போது வரை பிரியாணி தயார் செய்யும் முறையை, ரகசியமாகவும் பாதுகாத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கு, விதவிதமான உணவு சலுகைகளை வழங்கி வருகிறோம். கோடை ஆபர் பிரியாணி, 23 வகை பிரியாணி திருவிழா, ரம்ஜான் இப்தார் பிரியாணி பாக்ஸ், அன் லிமிடெட் தோசை பரோட்டா திருவிழா போன்றவற்றை வழங்கி வருகிறோம். இதையடுத்து, தமிழகம் முழுதும் திண்டுக்கல் தலப்பாகட்டியின் அனைத்து கிளைகளிலும், இன்று, 'லெஜண்டரி பிரியாணி டே' கொண்டாடுகிறோம். இந்த ஒரு நாள் மட்டும், காலை 6:00 முதல் இரவு 12:00 மணி வரை, சிக்கன் பிரியாணி, 149 ரூபாய்க்கு சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப் படுகிறது. சாப்பிட்டாலும், பார்சல் மற்றும் ஆன்லைனில் 'ஆர்டர்' செய்தாலும், சிறப்பு கட்டணத்தில், வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் . இவ்வாறு கூறினர்.