உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம்; காந்தி ஜெயந்தி விழாவில் முதல்வர் வேண்டுகோள்

கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம்; காந்தி ஜெயந்தி விழாவில் முதல்வர் வேண்டுகோள்

சென்னை: 'கதர் உற்பத்தியில் ஈடுபட்டோரின் வாழ்வில் உயர்வை ஏற்படுத்த கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், அவர் கூறியதாவது:

தேச நலன் காக்கும் கதர், கிராமப்பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்ப்போம். மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்க வேண்டும். கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம்; நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம்.கதர் பருத்தி, கதர் பாலிஸ்டர், கதர் பட்டு ரகங்கள் மக்களுக்கு 30% தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. கதர் பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2024 15:50

அதெப்படிங்க ஈரோட்டுக்காரரு சிலைக்கோ சமாதிக்கோ போகும்போது மட்டும் ஆட்டோமேட்டிக்கா கருப்பு சட்டை வந்து மேல குந்திக்குது. காந்தி சிலைன்னு சொன்னா மட்டும் உடம்புல கதர் வரமாட்டேங்குது, வாயில உபதேசம் மட்டும் வருது. இதுக்குப் பேருதானே திராவிட மாடல்? .


தமிழன்
அக் 02, 2024 15:15

போட்டுக் இட்டு இருப்பது பேண்ட்.. இவரு கதருக்கு கைகொடுப்போம் என்று சொல்லறாரு.. மக்கள் நம்பிடுவாங்க.. ஓட்டும் போட்டு விடுவாங்க ... போடுவதற்கு காசு கொடுப்பாங்க.. வாங்காவிட்டால் தண்ணீர் மின்சாரம் வராது.. அல்லது வழக்கு வரும்.. மக்களுக்கு எப்போ விடியல் வரும்.?


Ramesh Sargam
அக் 02, 2024 12:08

இன்று ஒரு நாலாவது தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு, அதாவது மதுக்கடைகள் இன்று முழுவதும் மூடப்பட்டிருக்குமா...? அல்லது புறவாசல் வழியாக அமோக விற்பனை உண்டா...?


தமிழன்
அக் 02, 2024 15:16

நேற்றைக்கே நிறைய வாங்கி வைத்தது விட்டார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2024 15:47

இன்றும் விற்பனை உண்டு. ஆனால் கதவு திறந்து அல்ல, ஜன்னல் வழியாக . திறக்காவிட்டால் மாமூல் கை காசு போட்டு கொடுக்கணும்


Sivagiri
அக் 02, 2024 11:51

ஆகா ரொம்ப திறமையா தப்பிச்சிட்டாரே . . காந்தி சொன்னது பொய் சொல்லாதே திருடாதே , கொலை செய்யாதே , மதுவை விலக்கு , எளிமையா இரு , , . . . ஆனா அய்யா எல்லாத்தையும் ஓரமா ஓத்துக்கிட்டு , கதர் அணியுங்கள் என்பதை புடிச்சிட்டு , காந்தி ஜெயந்தியை கொண்டாடிட்டாரே , ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ ,


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2024 11:34

கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம் அப்படீன்னு சொல்ற நீங்க, இன்னிக்கு மட்டுமாவது, குறைந்த பட்சம் காந்தி படத்துக்கு மாலை போடும்போதாவது, மு வும் து மு வும் கதர் வேட்டி கட்டிக்கிட்டு வரக்கூடாதா? இன்னிக்கு கூட, விதேசி பாணியில் பேண்ட் தான் அணிய வேண்டுமா?


RAMAKRISHNAN NATESAN
அக் 02, 2024 19:47

இறக்குமதி செய்யப்பட்ட நாகரீகத்தைத் தூக்கிப்பிடிப்பதுதான் திராவிடம் .......


புதிய வீடியோ