உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!: முதல்வர் ஸ்டாலின்

கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களைக் காப்போம், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.வடகிழக்கு பருவமழை துவங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகியது. கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இச்சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தென்காசி பயணம் ஒத்திவைப்பு

இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் 24, 25 தேதிகளில் தென்காசிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல இருந்தார். ஆனால், சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Ramesh Sargam
அக் 21, 2025 23:51

இப்படி கூடி மீட்டிங் போடுவதை விட்டுவிட்டு, முதல்வர் முதற்கொண்டு எல்லோரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மீட்டிங் போடுவது, அங்கு டீ குடிப்பது, அந்த டீ செலவு என்று ஒரு பத்து லட்சம் மக்கள் வரிப்பணத்தில் ஆட்டைபோடுவது என்கிற செயல் வேண்டாம்.


Balasubramanian
அக் 21, 2025 22:58

கண்மூடித்தனமான அறிவிப்பு இவர்கள் என்ன இமயவர்களா? இமைக்கும் நேரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இன்றுவரை நிறைவேற்றாமல் நிற்பது பல!


Raj S
அக் 21, 2025 21:47

வருஷா வருஷம் வர்ற மழைக்கு, வந்த அப்பறம் ஆலோசனை செய்யறாரு??


Modisha
அக் 21, 2025 21:21

என்னது , ஒழுங்கா படிங்க .


Pandi Muni
அக் 21, 2025 20:57

எரிங்கள திறந்து விட்டாச்சில்ல அப்புறம் எப்படி மக்கள் தூங்கும். சும்மா நடிக்காதீங்க


Vasan
அக் 21, 2025 20:40

முதல்வரின் இந்த உத்திரவை நான் மென்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே அமைச்சர் பெருமக்கள் இரவு பகல் என பார்க்காமல் உழைக்கின்றனர். சென்ற வாரம், சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளை அமைச்சர் நள்ளிரவு 2 மணிக்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாக கேள்விப்பட்டோம். அமைச்சர்கள் அத்தனை வேலைப்பளுவையும் தங்கள் தலையிலும் தோளிலும் சுமக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் அவர்கள் ஒய்வு எடுப்பது கடினம். இப்படி இருக்கையில் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Modisha
அக் 21, 2025 21:19

நகைச்சுவையா


kjpkh
அக் 21, 2025 21:24

மென்மையாக கண்டித்தாலும் சரி வன்மையாக கண்டித்தாலும் சரி. தூதுவார 4000 கோடி செலவழித்தும் ஒன்றும் பலன் இல்லையா. சரி சரி இருக்கவே மத்திய அரசு இருக்கு. வானிலை அறிக்கை சரியாக சொல்லவில்லை என்று அவர்கள் மேல் பழியை போட்டு சமாளித்து விடலாம். அமைச்சர்கள் கண் துஞ்சாமல்இருக்கிறார்கள். மக்கள் வெள்ளத்தைப் பற்றியோ மழையைப் பற்றியோ கவலைப்படாமல் நிம்மதியாக தூங்கலாம்..


V Venkatachalam
அக் 21, 2025 20:37

இவிங்க உருட்டு புரட்டெல்லாம் தள்ளி விட்டுட்டு மழை கண்துஞ்சாமல் களத்தில் அது வேலையை தொடர்ந்து பண்ணிக் கொண்டே இருக்கிறது. கண் துஞ்சுறதுன்னா என்னான்னு சாராய யாவாரிக்கு தெரியுமா?


theruvasagan
அக் 21, 2025 20:02

மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார். கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார். அது என்ன கருமம்னு எல்லாருக்கும் தெரியும்.


அப்பாவி பண்டிட்
அக் 21, 2025 19:49

தேனி மே ஜாக்கே தேக்கோ சாப்...


Modisha
அக் 21, 2025 19:31

நாலு வருஷமா கண்துஞ்சாமல் செஞ்ச லட்சணத்தை தான் பார்த்ததோமே . இன்னுமா இந்த ஊர் நம்பளை நம்புது.


சமீபத்திய செய்தி