உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

கோவை: கோவையில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொழில் அமைப்பினர், விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்தவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை நேற்று, ரேஸ்கோர்ஸில் உள்ள ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு தரப்பினரும், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:

குறு, சிறு தொழில்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்போது, தொழில் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக புகார்கள் வருகின்றன. கொரோனா காலத்திலும் பல்வேறு உதவிகள் செய்து, தொழில்துறையை காப்பாற்றினோம்.இன்றைய அரசு, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வருகின்ற பிரச்னைகளையும் தீர்ப்பதாக இல்லை. புதிதாக பிரச்னைகளை அளிக்கும் அரசாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை; நீங்களே சொல்கிறீர்கள்.பருத்தி மகசூலை அதிகரிக்கவும், பருத்தி எடுப்பதை இயந்திரமயமாக்குவது, சீனாவைப் போல வண்ணப் பருத்தி உற்பத்தி குறித்தும் ஆய்வு செய்தோம். ஆட்சி மாற்றத்தால் அவை கைகூடவில்லை. என் ஆட்சிக் காலத்தில் ஒரு புறம் வறட்சி, ஒரு புறம் புயல் வெள்ளம், கொரோனா என பேரிடர்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் கூட நிம்மதியாக இல்லை. அவ்வளவு கஷ்டத்திலும், தொழில்துறை நலிவடையாமல் பார்த்துக் கொண்டோம்.விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தோம். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, நீர்நிலைகளை பாதுகாத்தோம். விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்தவரை, தொழில் நகரான கோவைக்கு விரிவாக்க நடவடிக்கைகள் அவசியம். எல்லாவற்றிலும் சிக்கலை ஏற்படுத்தும் தி.மு.க., அரசு, இதிலும் சிக்கலை ஏற்படுத்தியது. பணிகள் முடங்கின.

ஸ்கூட்டர் மானியம்

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விரிவாக்கப் பணி துரிதமாக நிறைவடையும். சுய உதவி குழுவினரின் கோரிக்கை கனிவோடு பரிசீலிக்கப்படும். ஸ்கூட்டர் மானியம் மீண்டும் வழங்கப்படும். கிரில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை, சம்பந்தப்பட்ட துறையோடு கலந்து பேசி, சாத்தியமாக்க பரிசீலிக்கப்படும்.வரும் தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்கும். தொழில்துறையினரின் நிலைக்கட்டணம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் கனிவுடன் பரிசீலிக்கப்படும். தொழில்துறை மட்டுமின்றி, அனைத்து துறையினரின் மனதையும் குளிரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயராம், தாமோதரன், அருண்குமார், முன்னாள் மேயர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

'ராணுவ தளவாட உற்பத்தி

தொழிற்சாலை அமைப்போம்'''அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் ஐந்து இடங்களில், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், தி.மு.க., அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாததால், திட்டங்கள் கிடைப்பதில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது மத்திய அரசுடன் இணக்கத்தைப் பேணி, அந்த ஐந்து ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்போம்,'' என்றார் பழனிசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ராஜா
ஜூலை 09, 2025 14:25

அம்மாவின் சாபம் கேட்டு பெற்றுக் கொண்ட முன்னாள் முதல்வர்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 09, 2025 12:43

சம்மந்தி பத்திரமா கவுண்டரே ?? மவன் பத்திரமா கௌண்டரே ??? உமக்கு கௌண்ட் டௌன் ஸ்டார்ட் ஆகிடிச்சி அவ்ளோ தான் யவர் ஹானர்


அப்பாவி
ஜூலை 09, 2025 11:15

டாஸ்மாக்கை அரசு நிறுவனமா வளர்த்தெடுத்த கட்சிக்கு ஓட்டு போடவே கூடாது. டாஸ்மாக்கை ஒழிப்போம்னு சொல்றவங்களுக்கே ஓட்டு.


karthik
ஜூலை 09, 2025 10:18

next cm plananisamy only


Venkateswaran Rajaram
ஜூலை 09, 2025 10:06

ஊழல் ,லஞ்சம் இல்லாமல் யார் ஆட்சி செய்தாளும் மனம் தானாக குளிற்ந்து விடும் ...யாரும் குளிர வைக்க வேண்டியதில்லை ...மக்கள் வரிப்பணம் வைத்து தான் ஆட்சி செய்கிறீர்கள் உங்கள் வீட்டு பணம் இல்லை ... சமூக சேவை செய்ய யாரும் அரசியலுக்கு வருவதில்லை, அரசியலுக்கு வருவதே மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கத்தான்


rameshkumar natarajan
ஜூலை 09, 2025 10:02

ADMK government accepted everything BJP wanted in Tamil Nadu. If admk comes to power, bjp will rule tamilnadu through them and bring all anti tamil schemes to tamilnadu. we just cannot believe EPS. No support to him.


Svs Yaadum oore
ஜூலை 09, 2025 08:44

தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு ......கோவையில் தங்க நகை தொழில் நலிந்து வருகிறது ....தங்க விலை உயர்ந்த பிறகு மேலும் பெரிய பாதிப்பு .....இந்த விடியல் அரசு இதை கண்டு கொள்ளாது ....திறமையான அமைச்சர்களும் இந்த விடியல் ஆட்சியில் கிடையாது ... தங்க நகை தொழிலாளர் பல கோரிக்கைகளை விடியல் கண்டுகொள்ளவில்லை .....இந்த விடியல் ஆட்சி உள்ளவரை மக்களுக்கு எப்போதும் விடியாது ....


rameshkumar natarajan
ஜூலை 09, 2025 09:58

Why cant central government cannot reduce import duty on gold. First you say that, thats the crux of the issue.


S.V.Srinivasan
ஜூலை 09, 2025 08:29

என்ன எல்லோருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பீங்களா? ஹி ஹி


முருகன்
ஜூலை 09, 2025 07:57

உங்களை பற்றி அனைவரும் நன்றாகவே அறிவார் தோல்வி அடைவது உறுதி


Minimole P C
ஜூலை 09, 2025 07:00

EPS need not do anything new. Just say we wont do corruption. That is enough. Party men may run away from you. But the public will support you.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை