இலவசங்களை நிராகரிப்போம்
எஸ்.காதர் பாஷா, 75ஓய்வூதியர், திருப்பூர்சுவிட்சர்லாந்து போன்ற மேலை நாடுகளில் இலவச திட்டங்களை அரசே வழங்கினாலும், மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையால் அரசின் வருவாய் பாதிக்கிறது. இதனால், சாலை கட்டமைப்பு, குடிநீர் திட்டங்கள், மின் சார்ந்த பணிகள் என, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் போய்விடுகிறது. இலவசங்களை தவிர்க்கும் மனம் வேண்டும்.