உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்: இ.பி.எஸ்.,

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்: இ.பி.எஸ்.,

சென்னை: திருச்சியில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., துவக்க உள்ளார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக.,வின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களது பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்து உள்ளோம். வெற்று பிம்பங்களோ , விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். தமிழர் உரிமை மீட்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். இவ்வாறு அந்த வீடியோவில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி