உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து

இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஸ்ரீசன் பார்மா' இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, 'ஸ்ரீசன் பார்மா' இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (அக் 13) ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை

இதற்கிடையே, இருமல் தயாரிக்கும் ஆலைக்கு, அதன் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vasan
அக் 13, 2025 21:38

மின்னல் வேகத்தில் செயல்பட்டு உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இந்த நடவடிக்கை மற்ற நிறுவங்களுக்கு அபாய மணியாகும். முறைகேடுகளை இந்த அரசு சும்மா பார்த்துகொண்டிருக்காது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சாட்சி.


Ramki
அக் 13, 2025 18:47

மருந்துக்கான அங்கீகாரம் எந்த ஆண்டு எந்த ஆட்சியில் வழங்க பட்டது? அப்போது உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டு்ம்


ஆரூர் ரங்
அக் 13, 2025 19:51

ஆபத்து லைசென்ஸ்சால் அல்ல. தவறான மூலப் பொருள் பயன்பாடு. அதனை டெஸ்ட் செய்யாமல் பயன்படுத்தியது. இதற்கும் உரிமம் கொடுத்ததற்கும் சம்பந்தமில்ல.


visu
அக் 13, 2025 20:18

இத்தனை வருடம் இந்த மருந்தை சாப்பிட்டு யாரும் சாகலையே அதனால் இப்ப நிலவரத்துக்கு விசாரிச்சா போதும்


V Venkatachalam
அக் 13, 2025 17:49

இத்தனை வருஷமா குடுத்த லஞ்சம் வீணாப்போச்சு. யார் அந்த சார் ஒண்ணும் பண்ண முடியாம நடவடிக்கை எடுத்துட்டார்.


sundarsvpr
அக் 13, 2025 17:33

தரமற்ற மருந்து நிறுவனத்தின் மருந்தை நோயாளிகளுக்கு பரிந்துரைத்த டாக்டர்களும் விசாரிக்கப்படவேண்டும். வியாதி உடனே தீரவேண்டும் என்பது முக்கியமில்லை. மீள வராது பக்க விளைவுகள் இருக்காது என்பது முக்கியம்,. பக்க விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்பதை மறக்கக்கூடாது. பாட்டி கை வைத்தியத்திலும் சித்த ஆயுர்வேத மருந்துகளால் இந்த நிலை இல்லை. இதனை யார் மக்களிடம் கொண்டுசெல்வது? அரசுதான் செய்யவேண்டும் அதுமட்டும் அல்ல. மருந்து விலையும் குறைவு.


SUBRAMANIAN P
அக் 13, 2025 16:30

இத்தினி வருஷமா நல்ல தூங்கிப்புட்டு மக்கள் வரிப்பணத்தை தெண்ட சம்பளமா வாங்கி நல்ல தின்னு கொழுத்து அதுவும் போதாதுன்னு பெரும் பணத்தை லஞ்சமாகவும் வாங்கி நல்ல சொகுசு வாழ்க்கை வாழும் அரசு அதிகாரிகள் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை அதையும் திங்க காத்திருக்கானுவளோ? ஒங்களுக்கு அழிவுகாலம் வரமாட்டீங்குதேடா


karthik
அக் 13, 2025 16:22

நான்கு வருஷமாக செய்வேண்டிய எதையுமே செய்யாமல்.... நிதி தரவில்லை என்ற ஒரே ஒப்பாரியை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றிவிட்டு.... இப்பொது 6 குழந்தைகள் உயிர் போன பிறகு மத்திய அரசிற்கு பயந்து நடவடிக்கை.. செய்யவேண்டியதை செவ்வனே செய்யாமல் விட்ட முதல்வருக்கு என்ன தண்டனை. ?


சிந்தனை
அக் 13, 2025 14:52

இந்த தவறை முன்கூட்டியே தடுக்காத நாட்டில் அநீதி வரும் முன்பே நீதியை நிலைநாட்டாத நீதிமன்றத்திற்கும் தண்டனை கொடுப்பது பொருத்தமானதாக இருக்குமே என்று தோன்றுகிறது


Indhuindian
அக் 13, 2025 14:48

Typical locking the s after the horse s have bolted


Natchimuthu Chithiraisamy
அக் 13, 2025 14:10

இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து எவ்வளவு லேட்டா அரசு செயல் படுகிறது. அளவு கடந்த சம்பளம் தருவது கடின உழைப்புக்கு இல்லை. கண்டிப்புடன் அரசு இருக்கும் என்று வியாபாரிகள் நினைக்க வேண்டும். அரசு அலுவலகம் சென்று எனக்கு அந்த தலைமை தெரியும் சொன்னாலே அதிகாரிகள் நடுங்குகிறார்கள். எந்த தலைமை என்று கூட தெரிந்துகொள்ளுவதில்லை. லஞ்ச பணம் வாங்கினால்தான் தலைமுறை அழிந்துவிடும் என்பதில்லை. ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை. கடின உழைப்பு அரசு அதிகாரிக்கு கண்டிப்பு.


Ramasamy
அக் 13, 2025 14:00

பொது மக்கள் இறந்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்பார்கள்


முக்கிய வீடியோ