உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: 40 பிளஸ்க்கு புது உத்தரவு

இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: 40 பிளஸ்க்கு புது உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே, புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (ஜூன் 11) காலை 11 மணியளவில் மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

W W
ஜூன் 10, 2024 22:11

கண் Eye டெஸ்ட் செய்வது மிகவும் நல்லது இரவில் டிரைவ் செய்பவர்கள் சிலருக்கு கண்தெரிவதில்லை Eye Test is Very Important.


Murugan
ஜூன் 10, 2024 22:03

அரசு பேருந்து ஓட்டுநர்கள் அரசாங்க அலுவலக வாகன ஓட்டுனர்களுக்கும் இந்த விதி பொருந்துமா


B Gopalaswamy
ஜூன் 10, 2024 21:17

மருத்துவ சான்றிதழ் ஏற்கனவே அமூலில் உள்ளது . லைசென்ஸ் வாங்கிய பிறகு உடல் நிலை கெட்டால் என்ன செய்வீர்கள். லஞ்சலாவன்யம் குறைய லைசென்ஸ்ஸை. புதிபிக்கதேவையில்லை என்று சட்டம் இயற்றினால் நல்லது அதுவும் சொந்த வண்டி வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேவையில்லை..


சோமு
ஜூன் 10, 2024 21:01

இதுக்குன்னே சில அரசு டாக்டர்கள் ஆட்டையப்.போட ரெடியா இருக்காங்க.


enkeyem
ஜூன் 10, 2024 20:08

இது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான. இப்போது பேப்பரில் வழங்கப்படுவது இனிமேல் ஆன் லைனில். எப்படி இருந்தாலும் டாக்டர்கள் காசு வாங்காமல் செய்ய மாட்டார்கள்


GMM
ஜூன் 10, 2024 19:43

தமிழக மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர் சான்று. இந்திய மருத்துவ கவுன்சில் பதிவு சான்று அவசியம்? இதனை தேசிய அளவில் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். எல்லா மாநில நம்பர் பிளேட் ஒரே மாதிரி. பீகார் மாநிலம் மட்டும் மாறுபடுகிறது. இதில் கூட ஒருமித்த கருத்து இல்லை. மாநில தனிச்சிறப்பு அதிகாரம் ஒன்றும் இல்லை? மத்திய உத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும். மாநிலத்திற்கு மட்டும் தேவை இருந்தால் மட்டும், தனியாக வெளியிடலாம்.


Ram pollachi
ஜூன் 10, 2024 18:10

மாட்டு டாக்டருக்கு ரூ.50/- ஐ வெட்டினால் மனிதனுக்கு சான்றிதழ் கிடைக்கும்... இது எல்லாம் ரொம்ப பழசு சார்.


சீனிவாசன்
ஜூன் 10, 2024 16:49

அதிசயமாக உள்ளது. எல்லா ஓட்டுனர் பயிற்சி அலுவலகத்தில் கத்தை கத்தையாக பெயர் நிரப்பப்படாமல் மருத்துவர் சான்றிதழ்கள் இருக்கின்றது.


Rajkumar
ஜூன் 10, 2024 16:48

தேவை illaathathu..லஞ்சம் தான் கூடும்...லஞ்சம் புழங்கும் பெரிய இடம் RTO ஆபீஸ் தான்.


M S RAGHUNATHAN
ஜூன் 10, 2024 15:40

Please do a search operation in Driving Schools.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ