| ADDED : ஜூலை 30, 2025 11:23 AM
சிவகங்கை: ''தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியல் 20 ஆவணப் படுகொலைகள் நடந்துள்ளன'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அஜித்குமாரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இ.பி.எஸ்., அவரது தாய், சகோதரர் நவீன்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இபிஎஸ் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o5asjl0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அஜித்குமார் கொலையில், தாக்குதல் நடத்திய போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அதிமுக தலையிட்டதால் தான் அஜித் குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அஜித் குமாரின் குடும்பத்திற்கு அதிமுக துணை நிற்கும்.அதிமுக போராடியதால் தான் திமுக அரசு வேறு வழியின்றி அஜித்குமார் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரால் உயிர் பறிபோயுள்ளது. போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? திமுக ஆட்சியில் 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.