உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 வயது சிறுவனை மது குடிக்க வைத்த ஆட்டோ டிரைவர் கைது!

7 வயது சிறுவனை மது குடிக்க வைத்த ஆட்டோ டிரைவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி அருகே 7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு; திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புதூர் உத்தமானூரைச் சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ டிரைவர். பொங்கல் நாளில் மது அருந்திய அவர், சும்மா இருக்காமல் தமது அருகில் இருந்த 7 வயது சிறுவனுக்கு அந்த மது பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த சிறுவனும் அதை வாங்கி குடித்துள்ளான். மது கொடுத்து அதை குடிக்க வைத்ததோடு நில்லாமல், செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் அஜித்குமார் வெளியிட்டு உள்ளார். 7 வயது சிறுவன் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதோடு கடும் கண்டனங்களும் எழுந்தன.வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சிறுவனை மது குடிக்க வைத்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Natchimuthu Chithiraisamy
ஜன 22, 2025 12:28

சிறை கதவுகள் உறுதியானவை.


N.Purushothaman
ஜன 20, 2025 08:49

சுயநலனுக்காக தி .மு க வுக்கு ஓட்டு போட்ட மக்கள் காலணியோ அல்லது சாட்டையையோ எடுத்து அடிச்சிக்கோங்க .....


jayvee
ஜன 20, 2025 05:01

அந்த வண்டிய ஓட்டினாலே புத்தி கெட்டுடும்


Rajan A
ஜன 19, 2025 22:38

இன்னும் கொஞ்ச நாளில் எப்படியும் அடிமையாகிவிடுவான். இது தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல.


Vijay D Ratnam
ஜன 19, 2025 22:11

பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கும் அந்த போலீசாரின் பொறுப்பற்ற செயலை கண்டிக்க வேண்டும் யுவர் ஆனர். தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்த செயல் தவறானது. இதுமாதிரி ஆளாளுக்கு செய்தால் எதிர்கால குடிகாரர்கள் எண்ணிக்கை குறையாதா. 7 வயதில் குடிக்க பழக்கினால் குறைச்சலா 60 ஆண்டுகளுக்கு டாஸ்மாக்கில் எவ்ளோ சரக்கு விற்பனையாகும். தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எவ்வளவு இழப்பு. அரசு ஊழியர்கள் சம்பளமே அதில்தான் வருகிறது என்று சொல்கிறார்கள். அரசு ஊழியர்கள் குடும்பத்தை பட்டினி போட்டு கொல்வதில் அந்த போலீஸ்காரருக்கு அப்படி என்ன ஆனந்தமோ. பெண்களை குடிக்க பழக்கியாயிற்று, அடுத்தது குழந்தைகளை குடிக்கு பழக்குமாக்குவதுதானே வளர்ச்சி.


Gokul Krishnan
ஜன 19, 2025 21:35

அக்கா கனிமொழி கையால் அவனுக்கு விருது வழங்கி அக்காவின் அண்ணன் கையால் ரூபாய் பத்து லட்சம் ரூபாய் சன்மானம் தர வேண்டும்


Ramesh Sargam
ஜன 19, 2025 21:07

இந்த ஆட்டோ ஓட்டுநர் கூடிய சீக்கிரம் டாஸ்மாக் நிறுவனத்தின் CEO பொறுப்பில் அமர்த்தப்படலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 19, 2025 21:49

அப்போ இவர் அடுத்த தேர்தலுக்குப் பிறகு பாட்டிலுக்கு பத்து ரூவா அமைச்சராகப்போறார்ன்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே?


Ramesh Sargam
ஜன 19, 2025 20:46

சிறையில் கூட மற்ற கைதிகளுக்கு சரக்கு ஊத்தி குடிக்கவைப்பான் அவன். மேலும் அங்குள்ள சிறை அதிகாரிகளுக்கும் ஊத்துவான்.


Rajan A
ஜன 19, 2025 22:39

எப்படியோ கல்லா நிறைந்தால் சரி


theruvasagan
ஜன 19, 2025 20:11

அந்த ஆட்டோக்காரனை டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடராக திராவிடனுக ஆக்கினாலும் ஆக்கிடுவாங்க.


Anantharaman Srinivasan
ஜன 19, 2025 19:59

இப்படிப்பட்ட துர்குணம் கொண்ட குடிகார ஆட்டோ டிரைவர்கள் வண்டிகளில் தான் பெரும்பாலும் நாம் பயணம் மேற்கொள்கிறோம். ஒலா காட்டும் தொகைக்கு மேல் 50 ரூ இல்லாமல் ஆட்டோ சாவரிக்கு வருவதில்லை. சிலர் ஆடாவடியாக 80 /100 ரூ கூட அதிகம் கேட்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை