உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் கமிஷன் ரத்து செய்த 42 தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியல் இதோ!

தேர்தல் கமிஷன் ரத்து செய்த 42 தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியல் இதோ!

புதுடில்லி: தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 தமிழக அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. அதன் முழு பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9zi04k9z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவற்றில் தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இவற்றில் தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; 1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி 4. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் 6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி 7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம் 8. அனைத்து மக்கள் நீதி கட்சி 9.அன்பு உதயம் கட்சி 10.அன்னை மக்கள் இயக்கம்11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி 12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம் 13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம் 14.எழுச்சி தேசம் கட்சி15.கோகுல மக்கள் கட்சி 16. இந்திய லவ்வர்ஸ் கட்சி 17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி 20. மக்கள் தேசிய கட்சி 21. மக்கள் கூட்டமைப்பு கட்சி 22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்23. மனிதநேய ஜனநாயக கட்சி 24.மனிதநேய மக்கள் கட்சி25.பச்சை தமிழகம் கட்சி 26. பெருந்தலைவர் மக்கள் கட்சி 27.சமத்துவ மக்கள் கழகம்28.சிறுபான்மை மக்கள் நல கட்சி29.சூப்பர் நேஷன் கட்சி 30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் 32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 33. தமிழர் தேசிய முன்னணி 34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி 35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி 36.தமிழர் முன்னேற்ற கழகம் 37. தொழிலாளர் கட்சி 38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்39. உரிமை மீட்பு கழகம் 40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி 41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம் 42. விஜய பாரத மக்கள் கட்சிஇந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பாஜ கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்எல்ஏவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார். ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை. இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அதிமுக, பாஜ கூ.ட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ சின்னத்திலும் போட்டியிட்டது. 2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

visu
செப் 20, 2025 22:45

அப்ப அந்த போலி மது ஒழிப்பு போராளி நந்தினி கட்சியை பதிவு கூட செய்யலையா ஹாஹா


மனிதன்
செப் 20, 2025 21:02

ஏம்பா, T.Rajendarin இந்த லட்சிய திமுக அங்கீகரிக்கப்பட்ட பெரிய கட்சியாப்பா???


Sundar R
செப் 20, 2025 19:25

மத்திய தேர்தல் கமிஷனில் தற்போது புதிது புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறதே. பிஹாரில் நேரில் காணமுடியாத கள்ளப் பெயரிலுள்ளவர்களை, விஹாரை விட்டு வெளியே பல வருடங்களுக்கு முன்பே புலம்பெயர்ந்தவர்களை, இருமுறை, மும்முறை பெயர்கள் இருக்கக்கூடிய வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட மொத்தம் 65,000 பேர்களை வாக்காளர்கள் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையர் நீக்கிவிட்டார். தேர்தல் கமிஷனின் இச்செயலை, ராகுல் காந்தி "ஓட்டு திருட்டு" என்று காட்டுக் கூச்சல், அன்றாடம் கூப்பாடு, பிஹார் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்று ஆட்டம் போட்டாலும், கொஞ்சம் கூட அசராமல் இருக்கிறார் நமது தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் அவர்கள். திரு ஞானேஷ் குமார் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து அவரை இன்னொரு டி. என். சேஷன் என்று பலரும் கூறுகிறார்கள். நாமும் தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்களின் அருகில் சென்று பார்த்த போது தான் அவர் ஐ.ஐ.டி கான்பூரில் படித்தவர் என்பதும், அவர் கேரளா பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என்பதும், அவர் இன்னொரு டி.என். சேஷன் என்பது உண்மை தான் தெரிய வந்தது. ராகுல் காந்தி, தலைமை தேர்தல் அதிகாரியான திரு ஞானேஷ் குமார் அவர்களோடு சண்டை போடுவது வேலையற்ற வேலை என்று தோன்றுகிறது.


மனிதன்
செப் 20, 2025 20:56

அய்யா சாமி, உங்க மனசுல அவர் உயந்த எடத்துலதான் இருப்பாரு... காரணம் தான் நமக்கு தெரியுமே... அப்புறம் சேஷன் கூடலாம் இவரை தயவு செய்து கம்பேர் பண்ணாதீங்க...அவர் சுயமாக முடிவெடுக்கும் அரசர், இவர் மற்றவர் கட்டளையை நிறைவேற்றும் அடிமை...


spr
செப் 20, 2025 18:27

ஒரு கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் குறைந்தது மூன்று சதவீதத்தையாவது அல்லது மாநிலச் சட்டப் பேரவையில் குறைந்தபட்சம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளையாவது வென்றிருக்க வேண்டும். இவற்றில் இதில் எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், இவற்றை விடுத்து இதர கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் புதிய கட்சிகள் தொடங்கவும் தடை விதிக்கப்பட வேண்டும் அப்படியானால்தான் இருக்கும் கட்சிகளில் மன நிறைவு பெறாதவர்கள் அந்தக் கட்சியைச் சீர் திருத்த முயல்வார்கள் குடும்ப ஆட்சிமுறை முடிவுக்கு வரும்.இவை நடக்காத ஒன்றே ... எனினும் ஒருநாள் நடக்குமென்று நம்புவோம்.


Mahendran Puru
செப் 20, 2025 18:25

நல்ல வேளை, நம்ம கட்சி பெயர் இந்த பட்டியலில் இல்லை.


Rengaraj
செப் 20, 2025 15:14

கூடிய விரைவில் கமலஹாசன் இயக்கி வெளிவந்த மக்கள் நீதி மய்யம் இந்த பட்டியலில் இடம்பெறும்.


Vasan
செப் 20, 2025 19:35

மக்கள் அநீதி மய்யம்.


duruvasar
செப் 20, 2025 14:52

இந்த பட்டியலில் தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயர் விடுபட்டிருப்பது எப்படி. ?


Sridhar
செப் 20, 2025 14:35

மையத்தை விட்டுட்டாங்க?


Ramesh Sargam
செப் 20, 2025 14:01

வேலைவெட்டி எதுவும் செய்யாமல் சுலபமாக சம்பாதிக்க ஆளுக்குஆள் கட்சி தொடங்கினால் இந்த கதிதான். போய் உழைத்து சம்பாதிங்கப்பா.


Er. G.Selvaraju
செப் 20, 2025 13:25

முதலில் திமுக அப்புறம் காங்கிரஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை