உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியல் சமூக விரோத செயல்பாடுகள்: தி.மு.க., அரசு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்

பட்டியல் சமூக விரோத செயல்பாடுகள்: தி.மு.க., அரசு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., அரசின் பட்டியல் சமூக மக்கள் விரோதச் செயல்பாடுகளின் பட்டியல் இன்னும் போய்க் கொண்டே இருக்கும்'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து அண்ணாமலைவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் என்பதையும், அவர் மறைவுக்குப் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி இழிவுபடுத்தினார்கள் என்பதை லோக்சபாவில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அம்பலப்படுத்தினர்.அதன் பிறகு, இண்டியா கூட்டணி, தங்கள் கடந்த கால வரலாறு, நாட்டு மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.இன்று, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பா.ஜ., எம்.பி.,க்களுக்கு கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் நாகாலாந்தைச் சேர்ந்த எம்.பி.,யை மிரட்டும் வகையில் சத்தமிட்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரின் இந்த வெட்கக்கேடான நடத்தை, தனக்குக் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தில் இன்று வி.சி.க., சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகள் குறித்து பார்லிமென்டில் பேசப்பட்டவை, காங்கிரஸ் மீது 'வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்' என்று பூசி மெழுகுகிறார் திருமாவளவன்.கடந்த 2012ம் ஆண்டு, அம்பேத்கரை அவமதித்ததற்காக, காங்கிரசையும், திமுகவையும் எதிர்த்து பார்லிமென்டில் அவரே போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டார்.திருமாவளவன் ஆவேசம் தவறானது. தனது கூட்டணிக் கட்சிகளுக்காக, எந்த வேஷம் வேண்டுமானாலும் போடத் தயாராகிவிட்டார். தன்னைச் சார்ந்திருக்கும் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவருக்கு இல்லை. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து, திமுகவுக்கு எதிராக ஒரு போராட்டம் கூட அவர் நடத்தியதில்லை. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூக மக்களுக்கு, தங்கள் அரசு இழைத்த கொடுமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக திமுகவினரும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.- ஒரு கிராமத்தின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்த குற்றம், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளது.- கோவிலுக்குள் நுழைந்ததற்காகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்தினார். திமுக, அந்த நிர்வாகியை இடைநீக்கம் செய்து, தேர்தலுக்கு முன் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தது.- தமிழகத்தில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் பெரும்பாலும் திமுக நிர்வாகிகளால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தி.மு.க அரசு இதைப் பார்த்தும் பாராமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. விசிக வாயை மூடி மௌனமாகவே இருக்கிறது.- மத்திய அரசின் SCSP திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணம், பட்டியல் சமூக மக்கள் நலனுக்காகச் செலவிடப்படாமலோ, அல்லது அரசின் பிற திட்டங்களுக்கோ மடைமாற்றப்பட்டது.திமுக அரசின் பட்டியல் சமூக மக்கள் விரோதச் செயல்பாடுகளின் பட்டியல் இன்னும் போய்க் கொண்டே இருக்கும்.பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் திமுகவினர், அம்பேத்கருக்கு உரிய மதிப்பை அளிக்காத, தேர்தலில் அவரைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்தியதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.பல தசாப்தங்களாக மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்த திமுக, பசையான மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அம்பேத்கரின் பெருமையைப் போற்றும்படியாக பலவற்றைச் செய்திருக்க முடியும் என்ற நிலையில், அம்பேத்கரின் மரியாதைக்காக என்ன செய்தார்கள்?இன்று எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும், காங்கிரஸும், திமுகவும் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும், அம்பேத்கருக்குச் செய்த அவமரியாதையையும், பட்டியல் சமூக மக்களுக்கு அவர்கள் செய்த களங்கங்களின் வரலாற்றையும் அழிக்க முடியாது. நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும், உங்கள் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். நமது நாட்டு மக்களும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bala
டிச 20, 2024 05:25

திமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு. பாஜகவும் திமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 2026 இல் அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை போராட்டம் தொடரட்டும். இதற்காக மற்ற எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்


Oru Indiyan
டிச 19, 2024 22:53

திருமால்வளவன் பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். வெட்கம் கெட்ட மனிதர். கட்ட பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் ஈன பிறவி.


Barakat Ali
டிச 19, 2024 22:46

அதானியை மாமன்னரின் மருமகன் சந்தித்ததற்கு ஆதாரம் எங்கே ???? டிஎம்கே ஃபைல்ஸ் 3 எங்கே ???


nagendhiran
டிச 20, 2024 05:48

பொருங்க பாய்? உங்க ஆர்வம் புரிகிறது?


Barakat Ali
டிச 20, 2024 09:33

எனது ஆர்வத்தை விடுங்கள் ..... இவரை நம்புபவர்களே இவரை மதிப்பார்களா என்று சொல்லுங்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை