உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்

சென்னை : 'வரும் அக்டோபர் மாதத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதால், அதற்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும். தற்போது, ஊராட்சிகளில் உள்ள பல உறுப்பினர் வார்டுகளை, ஓர் உறுப்பினர் வார்டுகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நடப்பாண்டில் மொத்தம் 6,509 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. நடப்பாண்டிற்குப் பின், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வை முடிவு செய்ய அமைக்கப்பட்ட 4வது மாநில நிதிக்குழு, தன் பரிந்துரைகளை விரைவில் அளிக்கவுள்ளது. இதை ஆய்வு செய்து 12 வது திட்ட காலத்திற்கான நிதிப்பகிர்வை அரசு முடிவு செய்யும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை