உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கந்தசஷ்டி பாடி உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கந்தசஷ்டி பாடி உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள் கந்த சஷ்டி கவச பாடல் பாடி உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்காததை கண்டித்தும், தீபம் ஏற்றக்கோரியும் நேற்று உயர்நீதிமன்ற அனுமதியுடன் உள்ளூர் மக்கள் திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் எதிரே உண்ணாவிரதம் இருந்தனர். கந்த சஷ்டி பாடலை தொடர்ந்து பாடினர். மக்கள் ஆர்வமுடன் திரண்டு வர, நீதிமன்ற உத்தரவுப்படி 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

தாத்தா காலம் முதலே போராட்டம்

எம்.பிரியா: நான் பிறந்ததும், வாழ்வதும் திருப்பரங்குன்றத்தில் தான். 43 வயதாகிறது. மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நான் பிறக்கும் முன்பிருந்தே எனது பெற்றோர், தாத்தா, பாட்டி போராடிக் கொண்டுதான் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நல்ல உத்தரவை பிறப்பித்தும் தீபம் ஏற்ற மறுப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது. முருகப்பெருமான் மலைகளில் தீபம் ஏற்றுவது என்பது தொன்மையான கலாசாரம். அதுபோல் திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பு

சிவ யசோதா: தீபத்துாணில் நாடு செழிக்க, மக்கள் செழிக்க, ஆன்மிக சிந்தனை வளர தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இதற்கு வரலாற்றில் ஆதாரம் உள்ளது. என்ன காரணத்தினாலோ இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. பின்பு மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது ஆன்மிகத்திற்கு முரண்பாடானது. ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உரிமை

பிரியா: மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அது எங்களது பாரம்பரிய உரிமை. யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. எங்களது உரிமைகளையும், கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம்.

52 கிராம மக்கள் காத்திருப்பு

முத்துக்கருப்பன்: மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக எங்களது பாட்டன், பூட்டன், சியான் கூறியுள்ளனர். இடையில் ஏதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது. அதிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்துதான் வருகிறோம். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களது கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் உள்ளது. இது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா. 100 ஆண்டுகளுக்கு முன்பு தீபத்துாணில் தீபம் ஏற்றியுள்ளனர். அதேபோல் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 52 கிராமங்களுக்கும் தெரியும்படி நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதை 52 கிராம மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அப்பத்தா பார்த்துள்ளார்

மகாராஜன்: மீண்டும் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது குறிக்கோள். அதற்காகவே ஒன்று திரண்டு உள்ளோம். எனது அப்பத்தா இந்த ஊரில் பிறந்தவர் தான். தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதை பார்த்ததாக அவரே கூறியிருந்தார். தீபம் ஏற்ற யாரும் தடை போடக்கூடாது. எங்கெல்லாம் முருகப்பெருமான் குடி கொண்டுள்ளாரோ அங்கெல்லாம் அவரது கையில் வேல் மட்டுமே இருக்கும். திருப்பரங்குன்றத்தில் கையில் வேலுடன் தராசும் இருக்கும். இந்த அமைப்பு கோயிலின் பெரிய வைர தேரில் உள்ளது. இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் முருகப்பெருமான் தராசு மூலம் நிறுப்பதாகவும், தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பதும் ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கை.

சில நெருக்கடிகளே காரணம்

பிரபு, உண்ணாவிரதம் இருக்க ஊர் பொதுமக்கள் சார்பில் மனு செய்தவர்: மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான். அதன் அமைப்பை பார்த்தாலே தெரியும். ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் அதை சர்வே கல் என்றும் கிரானைட் கல் என்றும் கூறுகின்றன. இதை கேட்பதற்கே மனது வலிக்கிறது. நீதி ஒரு போதும் துாங்காது. எங்கள் முன்னோர்கள் அந்த தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக கூறியுள்ளனர். உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதாக கூறுகிறார்கள். அது தவறு. எங்களுக்கு தெரிந்தவரை அதிகபட்சம் 25 ஆண்டுகள் கூட ஏற்றி இருக்க மாட்டார்கள். அங்கு தீபம் ஏற்றியதற்கு காரணம், சில இயக்கங்கள் கொடுத்த நெருக்கடிதான். தீபத்துாணில் தீபம் ஏற்ற தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடுகிறார்கள். அதை திசை திருப்புவதற்காக தான் உச்சிப் பிள்ளையார் மண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றும் சம்பிரதாயம் தொடங்கியது. இவ்வளவு நாட்கள் அமைதியாக தான் இருந்தோம். எங்களது கலாசாரத்தை மரபை மீறுவதுடன் சட்டத்தையும் மீறுகிறார்கள். அதனால் தான் பொதுமக்கள் கேள்வி கேட்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

joseph960
டிச 14, 2025 17:13

பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்துக்களின் வழிபாட்டு உரிமை, நூற்றாண்டு காலமாக (ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதன்பின் நடை பெற்ற ஆட்சிகளிலும்) மறுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை தற்போது மீட்டெடுக்கப் பட்டுள்ளது. இந்துக்கள் தங்களது மத நம்பிக்கையின்படி தங்களது கோவிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபட்டால், கலவரம் ஏற்படும் என ஏன் தமிழக அரசால் கட்டமைக்கப் படுகிறது?


Thirumal Kumaresan
டிச 14, 2025 14:51

நல்ல தொடக்கம் முருகன் வெற்றியை தருவார், அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்


Oviya Vijay
டிச 14, 2025 12:13

ஒரு 30 40 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் அனைத்து பண்டிகைகளையும் மத ஒற்றுமையுடன் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்... உனது எனது என்ற எந்த பாகுபாடின்றி மன நிறைவுடன் வாழ்ந்து வந்தோம்...


Rathna
டிச 14, 2025 11:29

பாராட்டுக்கள். உங்கள் மத மற்றும் கலாச்சார உரிமைகளை விட்டு கொடுக்காமல் இருப்பதற்கு.


GoK
டிச 14, 2025 11:25

இதெல்லாம் வேண்டாம் 2026இல் தேர்தல் அதில் காண்பியுங்கள் உங்கள் வருத்தத்தை. சனநாயகம் தழைக்க அதுதான் ஒரே வழி.


Kasimani Baskaran
டிச 14, 2025 10:15

இவர்களை டார்கெட் செய்யுமளவுக்கு வசதியாக தனித்தனியாக புகைப்படத்தை போட்டது சரியல்ல. ஒருவேளை சட்ட நிபுணர் குழுவை இவர்களுக்கு ஆதரவாக நியமித்தால் வரவேற்கலாம்.


நாடோடி
டிச 14, 2025 09:47

குழந்தைகளை படிக்க விடுங்கள், பெரியவர்கள் உண்ணா விரதம் இருக்கட்டும். ஆனாலும் பெரும் கூட்டம்தான் போல


Ram
டிச 14, 2025 09:46

50 பேர்தான் வரவேண்டும் என்று சொல்வது ஏன் .... போலீசுக்கு அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியதா


GMM
டிச 14, 2025 08:14

அனுமதி பெற்று 50 உள்ளூர் பிரமுகர்கள் மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை வசிக்கும் வீட்டின் முன் அல்லது அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் இருக்க வேண்டும். சக்தி வாய்ந்த திரு கோவில் சுற்றுப்புறம் மிக சுத்தமாக இருக்க வேண்டும். முக்கிய கோவில் எதிரில் நீண்ட காலம் இயங்கி வந்த சைவ ஓட்டல் அருகில் மாமிசம் உணவு ஓட்டல் அனுமதி.? மக்கள் வேலைக்கு செல்லும் முன், வியாபாரிகள் கடை திறக்கும் முன் ஒரு உள்ளூர் கோவில் வழிபாடு செய்து செல்வர். அருகில் டாஸ்மாக். திராவிடம் திருந்தாத ஜன்மம்.


NRajasekar
டிச 14, 2025 06:45

நமது மக்கள் ஆன்மீக வழிபாட்டை உரிமையை பாதுகாக்க பெற. எவ்வளவு. சாதவீகமான வழியை பின்பற்றுகின்றனர் இதே ஊரில் கந்தன் மலையில் பிரியாணி தின்று அடாவடி செய்பவர்களுக்கு அரசு பனிந்து போகிறது கந்தன் மலையில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து கோயிலை தர்காவாக மாற்றினதற்க்கு அந்த காலகட்டத்தில் அவர்கள் ஆசையை. இந்துக்கள் தடுக்கவில்லை. எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றனர் இந்த மத கார்ர்கள ஊடுருவிபரந்து எல்லா இடத்தையும் ஆக்கிரமித்தாலும் காந்தியில் ஆரம்பித்து இன்று ஒரு ்்்்்்்் வரை எப்படி ஓட்டுக்காக் அவர்களை துதிபாடிகொண்டு இருக்கின்றனர்


முக்கிய வீடியோ