உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல: ஐகோர்ட்டில் தகவல்

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல: ஐகோர்ட்டில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் அல்ல' என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில், ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையம் உத்தரவிட, தடை விதிக்கவும் கோரப்பட்டது.இவ்வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமண்லால் ஆஜராகி, நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்த நிலம், பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாகவும், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், அஞ்சுகம் பதிப்பகத்துக்கு சொந்தமானது எனவும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இந்த நிலம், பஞ்சமி நிலம் அல்ல எனவும் தெரிவித்தார்.அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''புகார் மீது ஆணையம் விசாரணை நடத்தியது. இதுவரை உத்தரவு பிறப்பிக்காமல், நிலுவையில் வைத்துள்ளது. புகார் அளித்தவர் தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை. ''முந்தைய அரசின் தலைமை செயலர் தாக்கல் செய்த விபரங்களை மதிக்கவில்லை. நிலத்தின் உரிமை குறித்து ஆணையம் உத்தரவிட மட்டுமே தடை கோருகிறோம். பா.ஜ., லெட்டர் பேடில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் பகையை தீர்த்துக் கொள்ள ஆணையத்தை பயன்படுத்துகின்றனர். மணிப்பூரில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர்... அதற்காக ஆணையம் என்ன செய்தது,'' என்றார்.தேசிய ஆதிதிராவிட ஆணையம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''அரசியலமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு, புகாரை விசாரிக்க அதிகாரம் உள்ளது. ஆணையம் தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட நிலம், பஞ்சமி நிலமா, இல்லையா என்பதை ஆராய்வதை, சட்டம் தடுக்கவில்லை. ''ஆதிதிராவிட சமூகத்தினரின் உரிமை பாதிக்கப்பட்டதா என்ற முடிவுக்கு வர, ஆவணங்களை வரவழைத்து, பரிசீலனை செய்ய வேண்டும். யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்க கோர முடியாது. வழக்கு நிலுவையில் இருப்பதால், ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை,'' என்றார்.புகார் அளித்த சீனிவாசன் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, ''நிலத்தின் வாடகைதாரராக முரசொலி அறக்கட்டளை இருப்பதால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் கேளுங்கள் என ஆணையத்திடம் கூறலாம். ஆதிதிராவிடராக இருந்தால் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்பது சரியல்ல. ''இதே பிரச்னை குறித்து, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரும் புகார் அளித்துள்ளார். ஆணையம் கோரினால், ஆவணங்களை தாக்கல் செய்வோம்,'' என்றார்.வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதாக, மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Bala
ஜன 05, 2024 14:53

சர்க்கரையை எறும்புகள், சாக்குகளை கறையான்கள் சாப்பிட்ட மாதிரி இதற்கு பத்திரம் உருவாக்க முடியாத திருட்டுத் திராவிட தெலுங்கர்கள் கும்பல்களால் ?


M Ramachandran
ஜன 05, 2024 13:47

ஏதோ எங்களால் முடிந்த புருடா விட்டு பார்ப்போம். நீதி மன்றம் தூங்கினால் ஆட்ர சக்கை ஆட்ர சக்கை


பச்சையப்பன் கோபால் புரம்
ஜன 05, 2024 13:04

இவுங்களுக்கு அறிவுன்றதே கெடையாது. யாராவது மூலத்துக்கு பத்திரம் வச்சிருப்பாங்களா?இல்லே பத்திரத்தோடதான் மூலம் வச்சிருப்பாங்களா?? பெரிய ரோதனையா இருக்கீ! எப்ப பார்த்தாலும் மூல பத்திரம் கொடு மூல பத்திரம் கொடூ!!!!


ANANDAKANNAN K
ஜன 05, 2024 11:33

திரு.வில்சனின் பதில் மற்றும் சட்ட அறிவில் கொஞ்சம் கூட விதிமுறைகள் இல்லை, மேடையில் திமுக அரசியல்வாதி பேசும் பேச்சு போல் உள்ளது, மணிப்பூருக்கும் இந்த வழக்கும் கும் என்ன தொடர்பு, மூல பத்திரம் இருக்குதா அல்லது இல்லையா ?? பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியது திமுக வக்கீலின் கடமை அதை விட்டு தேவை இல்லலாமல் பேசி கொண்டு இருந்தால் அதை திருட்டு சொத்தாக கருத வேண்டும், மேலும் இந்த வழக்கில் வாய்த்த வேண்டிய படி நிற்கிறாரார் திரு.வில்சன், இது கண்டிக்க தக்க செயல்தான்.


theruvasagan
ஜன 05, 2024 14:14

கோர்டில் ஒரு அரசியல்வாதி மாதிரி ஒரு வக்கீல் பேசுவது அந்த தொழிலுக்கு உண்டான மரியாதை இல்லை.


ram
ஜன 05, 2024 10:49

பட்டா இருந்தால் காண்பிக்க வேண்டியதுதானே அதை விட்டு விட்டு எதோ கம்பி கட்டுரை கதை எல்லாம்


duruvasar
ஜன 05, 2024 10:07

இந்த விஷயத்தில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாக போவது அய்யா வில்சன் தான். இல்லாத மூலபத்திரத்தை இருக்கு என வாதாடுவது அவ்வளவு சுலபமல்ல. ஜெர்மன் கம்பனி அஞ்சுகம் கம்பனி இதெல்லாம் கம்பி கட்டும் கதை. ஜெர்மானிய கம்பனி இந்த நிலத்தை யாரிடமிருந்து வாங்கியது என்பதுதான் கேள்வி. ஒருவேளை அந்த காலத்தில் ஜெர்மனி கம்பனி சென்னையிலும் தமிழகத்திலும் நிலங்களை வாங்கி குவிந்திருப்பார்களோ ?


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:06

முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று தீர்ப்பு வந்தபின் இந்த போலி பேராசிரியர் மீது எல்லாம் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க வேண்டும். அப்போது தான் பலருக்கு அது பாடமாக இருக்கும். மாறாக தீர்ப்பு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். யாரும் தடுக்க வில்லை.


ராஜேந்திரன்,அரியலூர்
ஜன 05, 2024 13:47

நீ எப்போதும் போல திமுகவுக்கு முட்டுக் கொடு அதையாரும் தடுக்கவில்லை


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:03

BJParty - யில் பேராசிரியர் என்ற ஒருவர் இருக்கிறார். என்ன படித்து பேராசிரியர் ஆனார் என்று பிடிஆர் அவரை கிழித்து தொங்க விட்டுள்ளார். பேராசிரியர் ஆகாமலே பேராசிரியர் என்று போட்டு கொள்வது எவ்வளவு கேவலம். அப்படி பட்டவர்கள் தான் யோக்கிய சிகாமணிகள் போல கேள்வி கேட்பார்கள்.


தமிழ் மைந்தன்
ஜன 05, 2024 11:23

அன்பழகனை இப்பிடி பேசலாமா ?


Yaro Oruvan
ஜன 05, 2024 14:07

மறைந்த பேராசிரியர் (?) அன்பழகனை பற்றி இப்டி கூவலாமா சொந்தமிழ்ஸ் ?


karunamoorthi Karuna
ஜன 05, 2024 08:52

மூலப் பத்திரம் காட்டினால் உண்மை வெளியே வரும் திருடர்கள் முன்னேற்றக் கழகம்


VENKATASUBRAMANIAN
ஜன 05, 2024 08:43

போலி ஆவணங்கள் ரெடி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை