உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதியவரை கொன்ற லாரி டிரைவர் கைது

முதியவரை கொன்ற லாரி டிரைவர் கைது

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் செல்வம், 50, என்பவரை அடித்து கொன்ற லாரி டிரைவர் நந்தியப்பன், 50, கைது செய்யப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், டி.வீரப்பள்ளியை சேர்ந்தவர் நந்தியப்பன். லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரோஜா, 45. இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அக்., 23ல் ரோஜாவிடம் நந்தியப்பன் தகராறில் ஈடுபட்டார். இதை, ரோஜாவின் சின்ன மாமனார் செல்வம் என்பவர் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த நந்நதியப்பன், இரும்பு தடியால் செல்வத்தை தாக்கினார். பலத்த காயமடைந்த செல்வம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்., 25ல் உயிரிழந்தார். கந்திலி போலீசார் வழக்கு பதிந்து, நந்தியப்பனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை