| ADDED : டிச 22, 2024 02:35 PM
சென்னை: டிசம்பர் 24, 25ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gic9c0ur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வலுவிழந்தது. மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து டிச.,24ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் டிச.,28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 24, 25ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.