உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.சி.யூ., சிகிச்சையில் இருக்கும் தந்தை முன்பாக நிக்காஹ் செய்த மகள்: வைரலாகும் வீடியோ

ஐ.சி.யூ., சிகிச்சையில் இருக்கும் தந்தை முன்பாக நிக்காஹ் செய்த மகள்: வைரலாகும் வீடியோ

லக்னோ: உடல்நிலை மோசமடைந்து ஐ.சி.யூ.,வில் சிகிச்சைபெறும் தந்தை முன்பாக மகள், இஸ்லாமிய முறைப்படி திருமணம் (நிக்காஹ்) செய்துகொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனை எப்படியாவது நல்லபடியாக நடத்திவைக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுவதுபோல, பிள்ளைகளும் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் முகமது இக்பால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே முகமது இக்பாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d31khtw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில், மகளின் திருமணத்தை பார்த்துவிட வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற மகள் எண்ணினார். அதன்படி, முகமது இக்பால் முன்பாகவே திருமணம் நடைபெற முடிவு செய்தார். மருத்துவமனையின் ஒப்புதலோடு இஸ்லாமிய முறைப்படி ஐசியூ.,வில் திருமண விழா (நிக்காஹ்) நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 14:41

இதெல்லாம் ஒரு மேட்டரா ????


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 11:38

இது எவ்வளவோமேல். .


Venkatesan
ஜூன் 19, 2024 10:17

முதலில் திருமணமான ஜோடிகளுக்கு நாள் வாழ்த்துக்கள். எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு vaazhga.


sundarsvpr
ஜூன் 19, 2024 10:03

ஆண்டவன் நிர்ணயத்த பிராகாரம் திருமணம் நடந்துள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை